பதினெட்டாம் போர்
ஆசிரியர்:
முத்துவேலழகன்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D?id=1795-1805-7728-4038
{1795-1805-7728-4038 [{புத்தகம் பற்றி அரசியல் பார்வையோடு மட்டும் நின்றுவிடவில்லை இந்தப் பதினெட்டாம் போர். சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட இனங்கள் நடத்தும் உரிமைப் போர்க் குரல்களும் ஆங்காங்கே ஒலிக்கின்றன. ஆற்று மணலை எண்ணிவிடலாம், அள்ளலாம். அர்ஜுனன் மனைவியரை எண்ண முடியாது என்பது கிராமத்து மொழி. பாஞ்சாலியின் பதிகளில் ஒருவனான அர்ஜுனனுக்கு வேறு பல மனைவியரும் உண்டு. அவர்களின் கண்ணனின் தங்கையான சுபத்ரா மட்டுமே அரண்மனையை அலங்கரிக்கும் உரிமையைப் பெற்றவள். காரணம், அவள் மேல்குலத்து மங்கை. அர்ஜுனன் மையல் கொண்ட மற்ற பெண்களுக்கு இந்த உரிமை இல்லை. அதனால்தான் உலூபியும் அவள் மகன் அரவானும் அரண்மனைக்குள் நுழைய முடியவில்லை.
<br/> கோபமும் கொந்தளிப்புமாக மகாபாரதக் கதாபாத்திரங்களிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் அனைத்துமே இன்றைய சமுதாய அக்கிரமங்கள் மீது சாட்டையை சுழற்றி வீசுகின்றன நாடகமாந்தர்களின் கைகளில் அலங்காரமும் அவர்களின் உதட்டிலிருந்து வெளிப்படுத்தும் வார்த்தைகளில் யதார்த்தமும் நிறைந்திருப்பது நாடகத்தின் வெற்றிக்கான முக்கிய அம்சம். என்ன காரணத்திற்காக வசனங்கள் எழுதப்பட்டிருக்கின்றவோ அதனை உணர்ந்து வெளிப்படுத்தும் நடிகர்களால் நாடகம் சிறப்புப் பெறுகிறது. தேவைக்கேற்ப தந்திரக் காட்சிகள், காட்சிக்கேற்ற ஒளிக்கலவைகள் என இந்தக் கணினி யுகத்திலும் இதிகாசத்தை இமைகொட்டாமல் ரசிக்கச் செய்யும் விதத்தில் நாடகத்தை அமைத்திருக்கிறார் முத்துவேலழகன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866