பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-4)

ஆசிரியர்: ஓஷோ

Category தத்துவம்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaper Pack
Pages 304
Weight300 grams
₹175.00 ₹166.25    You Save ₹8
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மனிதமனம் மிகப் பெரியது. தனிச்சிறப்புடையது. ஆரோக்கியமுள்ள மனம் நோய்க்குறியுடைய மனதைக் காட்டிலும் பெரிதாயிருக்கும், காரணம் நோய்க்குறியுள்ள மனம் ஆரோக்கியமான மனதின் ஒரு பகுதியேயன்றி முழுமையானதல்ல. யாரும் முழுமையான அளவில் பைத்தியமாகி விடுவதில்லை . யாராலும் முடியாது. ஒரு பகுதிதான் வெறி கொண்டு விடுவது. பகுதியளவே நோய் வாய்ப்படுகிறது. சரீரவியலில் உள்ளது போல் தான். யாருடைய உடம்பும் முற்றாக நோய்வாய்ப்பட்டு விடுவதில்லை .முற்றாக நோயற்ற உடம்பை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அது சாத்தியமில்லை. யாரும் அந்த அளவிற்குப் போய் விடுவதில்லை. ஒருவருக்குத் தலைவலி. ஒருவருக்கு வயிற்றுவலி, வேறொருவருக்குக் காய்ச்சல் இப்படி ஏதாவது ஒரு பகுதிதான் பாதிக்கப்படுகிறது. உடம்பு மிகப் பெரியது. இப்பிரஞ்சம் மாதிரி.மனதைப் பற்றிய விதத்திலும் அதேயளவு உண்மைதான். இந்த மனம் ஒரு பிரபஞ்சம். ஒட்டுமொத்த மனதும் பித்துப் பிடித்து விடாது. அதனால்தான் பித்துப் பிடித்தவர்களை நடைமுறைக்குக் கொண்டு வர முடிகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

தத்துவம் :

கவிதா பதிப்பகம் :