பண்டைய வேத தத்துவங்கள்

ஆசிரியர்: நா.வானமாமலை

Category ஆய்வு நூல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 88
ISBN978-93-80218-97-7
Weight150 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்திய மக்களின் அறிவுச் சூளையில் காலங்காலமாகத் திணிக்கப்பட்டு வந்தவை வேதங்கள் என்னும் கருத்துக் கோவைகளே. பல்வேறு அறிவுச் சிந்தனைகளை உள்ளடக்கியவை வேதங்கள் என்ற அடிப்படையிலே ஆதிகாலத்தில் வழிவழியாக பரம்பரையாகப் பேசப்பட்டும் வழங்கப்பட்டும் வந்த எண்ணங்கள் பின்னர் எழுத்துருவம் பெற்று வேதங்கள் எனக் குறிக்கப்பட்டன. எனவேதான் அவற்றை அருளியவராக ஒருவருடைய பெயர் குறிப்பிடப்படவில்லை . ஆக வேதங்கள் என்பவை மக்களின் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நெறிமுறைகள் மிகப்பிற்பட்ட காலத்தில் தொகுத்து எழுதப்பட்டன. பின்னர் அவை இறைவனால் அருளப்பட்டவை என்றும் வாழ்க்கைத் தத்துவங்களைப் போதிப்பவை என்றும் பறைசாற்றப்பட்டன.
திராவிட மொழியியல் அடிப்படையில் வேதத்தத்துவங்களையும் அவற்றை மறுத்து எழுந்த பௌத்தத்தையும் ஒப்பிட்டு காரண - காரிய விளக்கங்களுடன் ஆய்வு செய்து வெளிப்படுத்தி நூலாக்கித் தந்திருக்கிறார் பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள். மாணவர்க்கும் மற்றவர்க்கும் பயன்படும் வகையில் அவருடைய தத்துவங்களும் வேதமறுப்புப் பௌத்தமும் திராவிட மொழியியல் நோக்கில் ஓர் அறிமுகம் என்னும் இந்நூலை வாங்கிப் படித்துப் பயனடைவார்களாக.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா.வானமாமலை :

ஆய்வு நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :