பண்டைக்கால இந்தியா

ஆசிரியர்: எஸ்.ஏ.டாங்கே

Category கம்யூனிசம்
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatPaper back
Pages 234
Weight300 grams
₹225.00 ₹213.75    You Save ₹11
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மார்க்ஸிய கண்ணோட்டத்தில் பண்டைக்கால இந்திய வரலாற்றை ஆராய்ந்து அறியும் முதன் முயற்சி. வடமொழி நூல்களில் பாண்டித்தியம் பெற்றவரும் மார்க்ஸிய புலமைக்கு உரிய வருமான எஸ். ஏ. டாங்கே அவர்கள் எழுதியது.
இந்திய சரித்திரத்தை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தறிய விரும்பும் மாணவர்களுக்கு டாங்கேயின் நூல் புதிய வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது. நமது வரலாறு பற்றிய விவாதத்தை ஒரு புதிய தரத்துக்கு உயர்த்திச் செழுமை அடையச் செய்திருக்கிறது. பின்னுரையைப் படிக்கும் வாசகர்கள் இதை நன்கறியலாம்.
தமிழ் நாட்டு சரித்திர மாணவர்களும் தமிழறிஞர்களும் இந்த விவாதத்தில் ஆற்றவேண்டிய பங்கு மகத்தானது. அதற்கு உதவியாக இந்த நூலைத் தமிழில் தருகிறோம்.
நான் வடமொழி மாணவன் என்று உரிமை கொண்டாடு வதற்குக்கூடத் தகுதியற்றவன். வடமொழியில் தேர்ச்சி பெற்ற ஓரிரண்டு பெரியார்களின் உதவியின்றி, நான் இந்தப் பணியை நிறைவேற்றியிருக்க முடியாது. அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றி.
என்னுடைய பல குறைகள் இந்த தமிழ்ப் பதிப்பில் பிரதிபலித்திருக்க வேண்டும். அவற்றைப் பொறுத்தருள வேண்டுமென்றும் சுட்டிக்காட்டித் திருத்த வேண்டு மென்றும் அறிஞர்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.ஏ.டாங்கே :

கம்யூனிசம் :

அலைகள் வெளியீட்டகம் :