பட்டினத்தார்-தாயுமானார் பாடல் பெருமை

ஆசிரியர்: சாமி. சிதம்பரனார்

Category ஆன்மிகம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
Format Paperback
Pages 104
ISBN978-81-925789-5-8
Weight150 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பட்டினத்தார் காவிரிப்பூம்பட்டினத்தில் தோன்றி சென்னைத் திருவொற்றியூரில் நிறைவுபெற்றவர். பட்டினத்தார் பலர் என்பாரும் உண்டு. இவருடைய பெயரில் சித்தர்பாடல்கள் தொகுப்பிலும், பதினோராந் திருமுறையிலும் பாடல்கள் அமைந்துள்ளன. இவருடைய பாடல்களில் வேதாந்த கருத்துகளும் பகுத்தறிவு உணர்வுகளும் மேலோங்கி இருக்கக் காணலாம். இவர் செல்வந்தர் குடியிலே பிறந்து துறவியானவர். பேய்க்கரும்பும் இனிக்கக் கண்ட பேரருளாளர்.
தாயுமானவர் பாடல்களிலே சமரச எண்ணம் மேலோங்கி நிற்கும். யாரிடமும் வெறுப்புக் காட்டியதில்லை. தன்னைத்தானே இரங்கும் எளிமை படைத்தவர். தத்துவக் கருத்துகள் தளர்நடையிடும். உலக ஞானம் நிறைந்தவர். அன்றாடம் வாழ்க்கையில் நடைபெறும் வஞ்சம், சூதுவாதுகளையெல்லாம் பாடியிருக்கின்றார். மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழும் உணர்வை ஊட்டும் கருத்துகளையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் அவருடைய பாடல்கள் விளக்குகின்றன.
வள்ளலார் இராமலிங்க அடிகளாருக்கு முன்பே சன்மார்க்கக் கருத்துகளைச் சொல்லி சமரசம் காணவைத்தவர்கள் இவ்விரு பெருமக்களும். அதனால்தான் இருவருடைய பாடல்களும் மக்களால் பெரிதும் போற்றப்படுகின்றன. இவ்விரு பெருமக்களின் அருள் திறத்தையும் விளக்கும் வகையில் அமைந்த நூலே பட்டினத்தார் - தாயுமானவர் பாடல் பெருமை என்னும் இந்நூல். ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள, சாமி. சிதம்பரனாரால் எழுதப்பட்டுள்ளது இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாமி. சிதம்பரனார் :

ஆன்மிகம் :

கௌரா பதிப்பக குழுமம் :