பட்டத்து யானை

ஆசிரியர்: முஹம்மது மஸ்தான்

Category நாட்டுப்புறவியல்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 80
First EditionOct 2009
ISBN978-93-80220-33-8
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 1 x (D) 14 cms
₹40.00 $1.75    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866"ஆடத் தெரிந்த காலும் பாடத் தெரிந்த வாயும் சும்மா இருக்காது!" - எனும் சுடு மொழி நெருப்பில், புடம் போடப்பட்டு வெளிப்பட்டவர்கள் தான் அத்தனை கலைஞர்களும்! இன்று கலைத்துறையை சார்ந்தவர்கள் - சாதித்தவர்கள் சாதித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவருமே, இப்படி படிப்படியாய் அடிபட்ட ரணங்களையும், அதன் வலிகளையும் அனுபவமாக்கிய படைப்புகள் தான் மக்களை ஈர்க்கின்றன.
பொருளாதாரத்தை மையப்படுத்தி சுழலும் இந்த உலகில் கலையாதாரத்தைக் கொண்ட என் நட்பு வட்டாரத்தில் நம்பிக்கை பதியம் இட்ட ரோஜாவாகத் திகழ்பவர் இனிய நண்பர் M.S. முஹம்மது மஸ்தான் அவர்கள்! பள்ளி வயதில் இருந்தே படைப்பிலும், நடிப்பிலும் நாட்டம் கொண்டு, அதையே வாழ்வாக்கிக் கொண்டவர். ஊடகங்களின் படையெடுப்பால், இன்று உருக்குலைந்து மெலியும் மேடை நாடகங்களை ஊட்டம் பெறச் செய்ய, உற்சாகமாக உறுதி பூண்டு உழைத்துக் கொண் டிருப்பவர். பல சாதனைகளை படைத்து கொண்டிருப்பவர். தனக்கென படைதிரட்டி, தகுந்தோரை அணிதிரட்டி தொடர்ந்து பல நாடகங்களை அரங்கேற்றி தமிழகமெங்கும் வெற்றி வலம் வந்து கொண்டிருக்கும் இவரை, தமிழக அரசு கலைமாமணியாக்கி கௌரவித்திருக்கிறது.
அவரது பட்டத்து யானை' சுந்தர படைப்புகளில் ஒன்று! நான் கைதட்டி ரசித்த நாடகம். இன்று இமைகொட்டி ரசிக்க, அச்சில் பதிவாவதை அக மகிழ்ந்து அணிந்துரைக்கிறேன். வன்முறையை வரைமுறையாகக் கொண்ட ஒரு முரட்டு மனிதன், தன் முறையில் உள்ள குறைகளை உணர்ந்து, திருந்தி வாழ முற்படும் போது இந்த சமூகம் எப்படியெல்லாம் அவனை சிதைக்கிறது என்ற கருத்தை அடிப்படைக் கருவாக்கி இருக்கிறார்.
ரங்கன் எனும் கதாபத்திரத்தைக் கையாண்டு சதுரங்கம் ஆடியிருக்கும் அவரது பாங்கு, இயல்பான உரையாடல்களும், சீரான காட்சியோட்டமும் வரிகளை வண்ணங்களாக்கி இருக்கின்றன. தேர்ந்த - மிகச்சிறந்த கலைஞர்களின் அடையாளமாகத் திகழும், சமூக அக்கறை சில காட்சிகளில் கோபமாக கொந்தளித்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாட்டுப்புறவியல் :

கௌரா பதிப்பக குழுமம் :