போகமுனிவர் பஞ்ச பட்சி சாஸ்திரம் உரையுடன்
₹100.00 ₹85.00 (15% OFF)
உரோமரிஷி வினாடிபஞ்சபட்சி சாஸ்திரம்
₹175.00 ₹140.00 (20% OFF)

பஞ்சபட்சி சாஸ்திரம்

ஆசிரியர்: லேனா தமிழ்வாணன்

Category ஜோதிடம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperpack
Pages 174
Weight150 grams
₹90.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



"ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்"
என வள்ளுவர் காலம் கருதலின் இன்றியமையாமையை வலியுறுத்துகிறார்.
அதாவது, தக்க நேரம் அறிந்து செயல்பட்டால் இந்த வையகத்தையே தன்வசப்படுத்த எண்ணினாலும் அக்காரியம் கைகூடும் என்பதாம்.
இதன் மூலம் காலம் தெரிந்து செயல்பட வேண்டும் என்பது தெளிவாகிறது.
இத்தகைய காலத்தை அறிவதற்கான மார்க்கத்திற்குப் பலரும் பல விதமான விளக்கங்களைத் தருவர். என்றாலும் பஞ்ச பட்சிகளின் ஊண், நடை, அரசு, தூக்கம், மரணம் என்ற ஐந்து தொழில்களை அறிந்து உற்ற நேரத்தில் செயல்பட்டால், எடுத்த காரியத்தை இனிதே முடிக்கலாம் என்பது ஜோதிட விதி.
பஞ்சபட்சிகள் என்பவை வல்லூறு, ஆந்தை, கோழி, காகம், மயில் என்பனவாகும். அவை செய்யும் தொழில் காலத்தையும் (ஊண், நடை, அரசு, தூக்கம், மரணம்), அக்காலத்திற்கு உரிய பலாபலன்களையும், அவரவருக்கு உரிய பட்சியை அறிந்துகொள்வது எங்ஙனம் என்பதையும் இந்நூல் தெள்ளத்தெளிய விளக்குகிறது.
பஞ்சபட்சி சாஸ்திரம், மந்திர தந்திர மாயா சக்திகளை உபதேசிப்பது. என்றாலும், அவை தற்காலத்திற்கு அவசியமில்லை என்பதால் நன்மை பயக்கும் மிக முக்கிய கருத்துகள் மட்டுமே இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன என்பதை வாசகர்களுக்குக் கூறிக் கொள்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
லேனா தமிழ்வாணன் :

ஜோதிடம் :

மணிமேகலைப் பிரசுரம் :