பஞ்சத்துக்கு புலி

ஆசிரியர்: ஷோபா ஷக்தி

Category கட்டுரைகள்
Publication கருப்புப் பிரதிகள்
FormatPaperback
Pages 160
First EditionJul 2011
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹80.00 ₹72.00    You Save ₹8
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Hereஅகற்று.காம்
'ஊர்கூடி பார்த்திருக்க நடுத்தெருவில் வீழ்த்தி, எம் பெண்களை வல்லாண்ட உம்மைக் கண்டு மறைவிடம் ஒடியொளிந்த நாய்கள் பிறிதொருபோதும் உம்முன்னே வருவதற்கஞ்சிய குற்றத்திற்காக . .. கைகால்கள் கட்டப்பட்டு பனிப்பாளத்தின் மீது கிடத்தப்பட்டிருக்கிறேன் பிணமென விரைக்கும் உடலுக்குள் கடுத்தேறுகிறது சில்லிப்பு , நடுங்கிச் சரிகிறது உயிர் தண்ணீர் கேட்டால் மூத்திரம் பெய்வதும் வாயைத் திறந்தால் மலம் திணிப்பதுமே நாகரீகக் கனவான்களாகிய உமது வாடிக்கையென்பதால், பசிதாகம் குறித்து புகாரிடாமல் மயக்கத்தில் வீழ்கிறேன் சித்திரவதைகளை உணராமலே செத்துவிடக்கூடாதென்ற பயத்தில் பந்தம் கொளுத்தி என்தலையைத் தீய்த்து பிரக்ஞையின் எல்லைக்குள் இழுத்துப் போடுகிறீர்கள் என்னை விசேஷமாய் பயிற்சி எடுத்தக் காவலரைப் போன்ற ஒருவன் என் கால்களில் லாடமடித்துக் கொண்டிருக்கிறான் , நகங்களைப் பிடுங்கி எடுத்துவிட்டு என் பற்களையும் பிடுங்கும் அவசரத்தில் குறடு ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது இன்னொருவன் கையில் வன்மங்களை நவீனமாய் தணிக்கத் தெரிந்த மற்றையவன் , வயர்களை என்குறியில் சுற்றி மின்னதிர்ச்சிக் கொடுக்கிறான் அடுக்களையிலிருந்து டப்பர்வேருடன் வந்த உங்கள் மனைவி/ மகள்/ சகோதரி/ யாரோ ஒருத்தி , இந்தக் கண்களா எம்மை ஏறெடுத்துப் பார்த்தவையென பலவந்தமாய் இமைபிரித்துத் தூவுகிறாள் மிளகாய்ப்பொடியை கொத்தியெறிந்தது போக நினைவில் எஞ்சியிருக்கும் என்னைத்தாளாது புதிய கொலையாயுதங்களை தேடிக்களைத்த உமது வாரிசுகள் கணினியின் விசைப்பலகை அதிர்ந்திடாத வண்ணம் மென்மையாக பதிவேற்றத் தொடங்குகின்றனர் ! என்மீதான அவதூறுகளை.

'வாய்ச்சொல் தலைச்சுமை என்று கிராமத்து எளிய மனிதர்கள் சொல்வதை நாம் கேட்டிருப்போம். ஒருவர் தனது சொற்களின் மீது எவ்வளவு கவனமாகவும் பொறுப்பாகவுமிருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் வெள்ளாந்தி மனிதர்களின் சொல்லாடலது. அனால் அவதூறாளர்க ளிற் கு சொற்கள் என்பது தலைச் சொற்கள் அவர்களுக்கு வெறுமனே தலையிலிருந்து உதிர்த்துவிடும் ரோமங்களே. இந்த ரோமங்களின் சேகரிப்புக் டெங்குதான் இன்றைய 'கீற்று' இணையத்தளம். திட்டமிட்டுப் பரப்பப்படும் அவதூறுகளைப் புறக்கணிப்பதே சரியானதாகயிருக்கும் என்றும் குறிப்பாக இலக்கியப் படைப் பாளிகள் தங்களது சக்தியை அவதூறுகளை எதிர்த்துப் போராடு வதில் வீணடிக்கக்கூடாது என்றும் சொல்பவர்களுண்டு. அவர்கள் அவதூறுகளின் வலிமையையும், அவதூறுகளால் நீண்டகாலப் போக்கில் ஏற்படக் கூடிய அரசியல் சீரழிவுகளையும் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

கருப்புப் பிரதிகள் :