பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

ஆசிரியர்: பட்டத்தி மைந்தன்

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 136
ISBN978-81-908678-4-9
Weight150 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எப்படியும் சாவுமணி அடித்தே தீரவேண்டும் என்று பள்ளிப்படிப்பின் போதே முடிவு செய்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பின்னர் துணிந்து நின்றார். இந்திய மக்கள் அனைவரையும் ஏற்றமுறு வீரர்களாக ஆக்கிடவேண்டும் என்ற எண்ணமுடன் நேதாஜியைத் தலைவராக ஏற்றுப் பாடுபட ஆரம்பித்தார்.எதிலும் எளிமை, துணிவு, தன்னடக்கம், வீரம் ஆகிய பெரும் பண்புகளின் உறைவிடமாக விளங்கி விவேகானந்தரைப் போல வீர உரைகள் ஆற்றி வந்தார்.
மணவாழ்வை மேற்கொண்டால் தம்முடைய மனம் போல மக்களின் நலவாழ்வுக்குப் பாடுபட முடியாது என்ற எண்ணத்தில் அவ்வாழ்வைத் துறந்தார்.இந்தத் திரு நாட்டில் அவதாரப் புருடராக அவதரித்த சான்றோர் பட்டியலில் இப்பெருமகனாருக்கு என்றும் தனி இடமுண்டு.
இதைப்போலத் தாய்நாட்டு விடுதலைக்காக உயிர் கொடுத்தோர் பட்டியலிலும் தமிழர்களுக்கு என்றும் இடமுண்டு. அந்தத் தமிழர்களில், தனித்து நின்று போராடும் குணம் பெற்றவராக விளங்கியதோடு தம் சொத்து பத்துக்களை யெல்லாம் தியாகம் செய்து என்றும் மக்கள் மத்தியிலே மாறாத ஒரு பெரிய இடத்தை இந்த மாமனிதர் பெற்று என்றும் நிலைத்திருக்கும் பெரும் புகழ் கொண்டு என்றுமே வாழ்ந்து வருகிறார் நம் நெஞ்சங்களில் எல்லாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பட்டத்தி மைந்தன் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :