பசி

ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம்

Category அறிவியல்
Publication அன்னம் - அகரம்
FormatPaperback
Pages 168
First EditionJul 2009
2nd EditionDec 2015
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹120.00 ₹118.80    You Save ₹1
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


உலகின் புகழ் பெற்ற நாவலாசிரியர்களில் ஒருவர் நட்ஹாம்சன். நாவல் இலக்கியத்தில் பலவிதமான சோதனைகள் செய்து வெற்றி பெற்றவர். அவருடைய முதல் நாவல் பசி, உள்ளத்தையும், உடலையும், ஆத்மாவையும், கற்பனையையும் பசி எப்படி, வாட்டுகிறது என்பதைத் தெளிவாகச் சொல்லுகிறார். லெனின் இதை மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என்று கூறியிருக்கிறார். மற்றொரு நவீனமான நிலவளம் 1920ல் நோபல் பரிசு பெற்றது. அது பற்றி பாரதியார் கூட சுதேசமித்திரனில் குறிப்பு எழுதியுள்ளார். 1953 வரை வாழ்ந்த நட்ஹாம்சன் தம் எழுத்துக்களால் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர். நீட்ஷேயின் சீடர். புரட்சிக்காரர். அவரது ஒவ்வொரு நாவலும் தனி சுவையுள்ளவை.
ஒரு மொழியில் இலக்கியம் வளர்வதற்கு மொழிபெயர்ப்புகள் உந்து கோலாக இருக்கின்றன. மொழியின் வளர்ச்சிக்கும் இவை உதவுகின்றன. தமிழில் ரசனை வளரும். சிலரேனும் வித்தியாசமாக எழுத முன்வருவார்கள் என்கிற எண்ணத்தில் தான் நான் மொழி பெயர்ப்புகளில் கவனம் செலுத்துகிறேன். பசியினால் ஓர் எழுத்தாளன் படும் அவதியைக் கூட ஒரு நவீனத்துக்கு கருப்பொருளாகக் கொள்ள முடியும் என்று சிறந்த முறையில் இதனை ஆசிரியர் படைத்துள்ளார். படிப்பவர்கள் நிச்சயம் ரசிக்க முடியும்.

உங்கள் கருத்துக்களை பகிர :