பக்கத்தில்தான் இருக்கிறது வீடு

ஆசிரியர்: தேவதேவன்

Category கதைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper back
Pages 100
First EditionDec 2019
ISBN 9 789388 973816
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹80.00 $3.5    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மலர் தேடும் மலர்,' ‘பற்றி இழுக்கும் ரோஜாவின் முட்கிளை' ஆகிய கைவசமுள்ள இரண்டு கவிதைத் தொகுதிகளிலும் இடம் பெற்றிருந்த, தலைப்பில்லாதனவாயும் சிறு அளவினதாயுமுள்ள, நானூற்று நாற்பத்தெட்டு கவிதைகளையும் தனியாகத் தொகுத்து 'பக்கத்தில்தான் இருக்கிறது வீடு' என்னும் ஒரு தொகுப்பை நாம் இங்கே படைத்திருக்கிறோம்.
இவ்வளவு தூரம் வந்து விட்டீர்கள். பக்கத்தில்தான் இருக்கிறது வீடு என்ற ஒரு அழைப்பு இதில் உள்ளதாகக் கருதுகிறேன் வாருங்கள் என்று அழைக்கிறேன். இத்துணை தைரியத்தை, துணிச்சலை, அல்லது ஆற்றலை, பெருமிதத்தை இவனுக்கு யார் கொடுத்தது என ஒருவர் வினவலாம். கவிதைதான்.
கவிதைபற்றி இந்தக் கவிஞன் தன் முதல் நூலிலிருந்து இதுவரை அவர் படைத்துள்ள 31 தொகுப்புக்களிலும் எழுதிக் கொண்டேயிருக் கிறார். நம்மைவிட கவிதைகள்தாம் கவிதை பற்றி நன்கு உரைக்கத் தகுந்தவை. ஆகவே நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டியது, எது கவிதை?
கவிஞன் எழுதுவதே கவிதை என்று ஒருவர் சொன்னால், யார் கவிஞன்? என்ற கேள்விக்கே நாம் வந்தாக வேண்டும். யார் கவிஞன்? இதுவே துவக்க காலத்திலிருந்தே அவரது நல்ல யோசனையாகவும் கண்டுபிடிப்பாகவும் இருந்து வருகிறது என்பதை வாசகர்கள் அறிவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தேவதேவன் :

கதைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :