பகவான் புத்தர்

ஆசிரியர்: ஆர்.வி.பதி

Category ஆன்மிகம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 112
ISBN978-81-8446-660-9
Weight150 grams
₹70.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பல்லுக்குப் பல் என்ற கொடூர எண்ணத்தை மாற்றி ஓரு கன்னத்தில் அறைந்தால் மற்றொரு கன்னத்தைக் காட்டு என்று அன்பை மனதில் விதைத்து மனிதர்களை நல்வழிப்படுத்தத் தோன்றியவர்களே மகான்கள். நம் இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மகான்கள் தோன்றியிருக்கிறார்கள். பண்டைய இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த நேபாள நாட்டில் சித்தார்த்த கௌதமர் என்ற பெயரில் அவதரித்த மகான் புத்தர், பீகார் மாநிலத்தில் இருக்கும் புத்தகயா எனுமிடத்தில் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார். புனிதம் மிக்க மகான்களின் வரிசையில் புத்தருக்கு ஒரு சிறப்பான இடம் இருக்கிறது. அன்பையும் கருணையினையும் கலந்து கடவுளால் படைக்கப் பட்டவர் புத்தரின் வாழ்க்கை அமைதியானது. ஆச்சரியங்கள் நிறைந்தது. அற்புதமானது. அன்பு நிறைந்தது. புத்தரின் வாழ்க்கை நெறிகளும் கொள்கைகளும் எந்த ஒரு மனிதனுக்கும் பயன்தரக்கூடியது. மனித வாழ்க்கையை செம்மையாக்க வல்லது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.வி.பதி :

ஆன்மிகம் :

விஜயா பதிப்பகம் :