பகவத்கீதை - திரட்டு

ஆசிரியர்: சுவாமி விவேகானந்தர்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 216
ISBN978-81-7823-671-1
Weight250 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வாழ்க்கையின் உயர்ந்த லட்சியத்தை விளக்குவதோடு நின்றுவிடாமல் அந்த லட்சியத்தை அடைவதற்கான பாதையையும் காட்டுவது பகவத்கீதை. பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டது இது. இதைப்பற்றிப் பேசாத சிந்தனையாளர்கள் மிகவும் குறைவு.சுவாமி விவேகானந்தர் தமது சொற்பொழிவுகளிலும் கடிதங்களிலும் பகவத்கீதையைப்பற்றிப் பல இடங்களில் விளக்கியுள்ளார். அவை அவரது இலக்கியத் தொகுதியில் பல இடங்களிலுமாக உள்ளன. அவற்றை மிகவும் கவனமாகத் தொகுத்து கல்கத்தா, அத்வைத ஆசிரமம் ஆங்கிலத்தில் 'Bhagavad Gita, As viewed by Swami Vivekananda' என்ற நூலாக வெளியிட்டது. இந்தப் பணியைச் செய்தவர் எமது மடத்தின் துறவியான சுவாமி மதுரானந்தர் ஆவார். அதைத் தமிழ்மக்களுக்காக இப்பொழுது வழங்குகிறோம்.
இந்த நூலில், பகவத்கீதையைப் பற்றி சுவாமி விவேகானந்தரின் பொதுவான குறிப்புகள் முன்னுரையில் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சுலோகத்தைப் பற்றிய கருத்துக்கள், அந்தந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற குறிப்புகள் பிற்சேர்க்கையில் தரப்பட்டுள்ளன. எடுத்தாளப்பட்ட குறிப்புக்கள் அனைத்தின் மூலநூலும் பக்க எண்ணும் பிற்சேர்க்கையில் ‘மேற்கோள்கள்' என்னும் பகுதியில் தரப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுவாமி விவேகானந்தர் :

ஆன்மிகம் :

ராமகிருஷ்ண மடம் :