பஃறுளி முதல் யுப்ரடீசு வரை

ஆசிரியர்: ம.சோ.விக்டர்

Category வரலாறு
Publication யாத்திசைப் பதிப்பகம்
FormatPaperback
Pages 408
First EditionJul 2005
3rd EditionJan 2014
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$15      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

பல துளி (பஃறுளி) ஆறு பாய்ந்த பழைய குமரிக் கண்டத்தில்தான், பைபிள் முதல் மனிதனாகக் குறிக்கும் ஆதாமின்வரலாறு நிகழ்ந்தது என்கிறார் ஆசிரியர்
ம.சோ. விக்டர் )
பைபிளிள் தொடக்க நூலில் வரும் மலைகள், ஆறுகள், விலங்குகள், மரங்கள், வழக்குகள் பலவிற்குத் தமிழ் மூலம் இருப்பதனை நூலாசிரியர் விளக்கும் பாங்கு வியப்பளிக்கிறது.
மிகைப்படுத்தல் என்று புறந்தள்ளவோ, நகையாடவோ முடியாதபடி வலுவான ஆய்வுத் தளமும் புலமைத்துவமும் வெளிப்பட எழுதியுள்ளார் ம.சோ.விக்டர்

பொய்யாகல நானும் புகழ்விளைத்த லென்வியப்பாம் வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக் கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடி. - புறப்பொருள் வெண்பாமாலை. தமிழ்க்குடியைப் பற்றித் தமிழர்களே மிகையாகச் சொல்லிக் கொள்ளும் வழக்கின்படி, முதற்குடி மூத்தகுடி என்றெல்லாம் சொல்லிக் கொள்கின்றனர் என்று, தமிழரில் சிலரே சொல்லி வந்தனர். தமிழ்க் குடியின் மூப்புத்தன்மையை பற்றி ஐயப்பாடு கொண்டிருந்த தமிழருக்கே, முதலில் தெளிவுபடுத்த வேண்டிய தாயிற்று. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தமிழரின் வரலாறு ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டு கட்டுப்பட்டதுதான் என்ற கருத்து தமிழரிடமேயிருந்தது. கி.மு. 500 ஆண்டுகளிலேயே ஆரியத்தின் தாக்கம் தமிழ்நாட்டிலிருந்து, கிறித்து பிறப்பாண்டு களில் மெல்ல மெல்ல ஊடுருவி, கி.பி. 10 ஆம் நூற்றாண்டுகளில் உச்சத்தை எட்டியது. தமிழரின் கையிலிருந்த தமிழ், ஆரியரின் கைக்கு மாறியது. இலக்கியங்கள் செய்தவரெல்லாம் தமிழா பிருக்க, அதற்கு விளக்கவுரை தந்தவரெல்லாம் ஆரியராயிருந் தமையால், தமது ஆரியக்கருத்தை விளக்கமாக ஏற்றிச் சொல்லி வைத்தனர். மூத்த மொழி ஆரியமே என்றும், தமிழ் அதனின்றும் பிறந்தது என்றும், ஆரியத்தின் உதவியின்றித் தமிழ் தனித்தியங்க வியலாது என்றும் ஆரியமே தேவ மொழியென்றும், அறிவியல் கணிதம் வானவியல் போன்ற அனைத்துக்கும் ஆரியரே மூலவர் என்றும், திரும்பத் திரும்ப அவர் கூறிவந்தமையாலும், தமிழின் தனித்தன்மையை விளக்கும் நூல்களை ஆரியர் அழித்துவிட் உமையாலும், ஆரியமே முதல் மொழி என்று தமிழரும் நம்பி விட்டனர்.
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தமிழரின் வரலாறு ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டு கட்டுப்பட்டதுதான் என்ற கருத்து தமிழரிடமேயிருந்தது. கி.மு. 500 ஆண்டுகளிலேயே ஆரியத்தின் தாக்கம் தமிழ்நாட்டிலிருந்து, கிறித்து பிறப்பாண்டு களில் மெல்ல மெல்ல ஊடுருவி, கி.பி. 10 ஆம் நூற்றாண்டுகளில் உச்சத்தை எட்டியது. தமிழரின் கையிலிருந்த தமிழ், ஆரியரின் கைக்கு மாறியது. இலக்கியங்கள் செய்தவரெல்லாம் தமிழா பிருக்க, அதற்கு விளக்கவுரை தந்தவரெல்லாம் ஆரியராயிருந் தமையால், தமது ஆரியக்கருத்தை விளக்கமாக ஏற்றிச் சொல்லி வைத்தனர். மூத்த மொழி ஆரியமே என்றும், தமிழ் அதனின்றும் பிறந்தது என்றும், ஆரியத்தின் உதவியின்றித் தமிழ் தனித்தியங்க வியலாது என்றும் ஆரியமே தேவ மொழியென்றும், அறிவியல் கணிதம் வானவியல் போன்ற அனைத்துக்கும் ஆரியரே மூலவர் என்றும், திரும்பத் திரும்ப அவர் கூறிவந்தமையாலும், தமிழின் தனித்தன்மையை விளக்கும் நூல்களை ஆரியர் அழித்துவிட் உமையாலும், ஆரியமே முதல் மொழி என்று தமிழரும் நம்பி விட்டனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :