நோய் வருவதும் உணவாலே!நோய் போவதும் உணவாலே!!(பிரிதொன்றுமல்ல)

ஆசிரியர்: மூ.ஆ.அப்பன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication பாப்புலர் பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 223
ISBN978-81-938450-8-0
Weight350 grams
₹215.00 ₹204.25    You Save ₹10
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நோய் வருவதும் உணவாலே, நோய் போவதும் உணவாலே! பிரிதொன்றுமல்ல!!' - என இயற்கையறிவு இயம்புகின்றது. ஆனால், நவீன மருத்துவ அறிவியலோ, நோய்க்குக் காரணம், 'கிருமிகள் (Virus)', 'பரம்பரை (Hereditary)' என்று! ஆனால் சமையலுணவு நவீனம் பெற்ற காலத்தில் வாழ்ந்த ஞானிகள், நோய்க்குக் காரணம், கர்ம வினை' எனக் கூறியுள்ளனர். ஆசி சமையலுணவு காலத்தில், மனிதனுக்கு நோயில்லை; ஆனால், முதுமை வந்துவிட்டது; சாக்காலம் (இறப்பு) கூட வரவில்லையாதலால், உயிருடன் முதுமக்கள் தாழியில் அகல் விளக்கு வைத்து புதைத்துள்ளார்கள் என்பதை நினைவு கூர வேண்டுகிறேன்.
உலகில் தீ (Fire) நெருப்பு வருமுன், பிற உயிரினங்கள் அனைத்தும் தத்தமக்குரிய இயற்கையுணவைத்தான் அவ்வுயிரினங்கள் தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை சிறிது கூட மாற்றாது, இயற்கையிலிருந்து சிதைக்காது உண்டு வாழ்ந்து வருகின்றன; அவைகட்கு நரை, திரை, மூப்பு இல்லை; ஏன்? - சாக்காடுகூட இல்லையென்றே சொல்லலாம். இது போல், உலகில் தீ (Fire) நெருப்பு காண்பதற்குமுன், மனிதனும் சூரிய நெருப்பில் மட்டும் வெந்த இயற்கை உணவை உண்டு வாழ்ந்த காலத்தில் மனிதனுக்கும் நரை, திரை, மூப்பு இல்லை ; ஏன்? சாக்காடு கூட இல்லை; எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் வாழ்ந்த திருமூலரை நினைவு கூருகின்றேன்...

உங்கள் கருத்துக்களை பகிர :
மூ.ஆ.அப்பன் :

உடல்நலம், மருத்துவம் :

பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் :