நேயர் விருப்பம்

ஆசிரியர்: கவிக்கோ அப்துல் ரகுமான்

Category கவிதைகள்
Publication யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்
FormatPaperback
Pages 96
ISBN978-93-87854-09-3
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஆழக் கடலில் மூழ்கவும் அண்ட வெளியில் பறக்கவும் ஒரு சிலர்க்கே முடியும். அந்த ஒரு சிலருள் ஒருவர் அப்துல் ரகுமான்.
அவர் மரபுக் கவிதையையும் புதுக்கவிதையையும் ஒரு சேரத் தம் ஆளுகைக்கு உட்படுத்தியவர். முதன் முதலில் மரபில் புதுக்கவிதையின் போக்கையும் நோக்கையும் புகுத்தி வெற்றி கண்டவர்.
தமிழ்க் கவிதையில் சோதனை முயற்சிகள் அபூர்வம். இவரோ தொடர்ந்து சோதனையும் சோதனையில் சாதனையும் செய்திருப்பவர்.
செவி இன்பத்துக்குரிய கவிதைகளைக் கூடச் செய் நேர்த்தித் திறத்தால் அழியாச் சித்திரங்களாக்கும் மந்திர சக்தி மிக்கது இவரது எழுதுகோல்.
வியரங்கத்தை நோக்கி இவரது பாதம் பட்ட பிறகுதான் ஒரு ராஜபாட்டை உருவானது. இன்று பலரும் அதில் பவனிவருகிறார்கள்.

கவிஞர் மீரா

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிக்கோ அப்துல் ரகுமான் :

கவிதைகள் :

யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் :