நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

ஆசிரியர்: பட்டத்தி மைந்தன்

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 152
Weight200 grams
₹120.00 ₹116.40    You Save ₹3
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த பாரத தேசத்தை விடுதலை பெறச் செய்ய பீடுகொண்டு உழைத்தவர் பலர். உடல், பொருள், ஆவி என அத்தனையும் ஈகம் செய்து நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள் பலர். செந்நீராலும், கண்ணீராலும் இந்த நாட்டைப் புனிதப்படுத்திய பெரியோர்கள் எண்ணிலர். அவர்களுள் பலர் காந்தியடிகளைப் பின்பற்றி அகிம்சை வழியில் போராடி வந்த மிதவாதிகள். இன்னும் சிலர் பாலகங்காதரத் திலகர் வழியைப் பின்பற்றி கடுமையாக உழைத்த தீவிரவாதிகள். துப்பாக்கிக்கொண்டு எதிர்ப்பவரை துப்பாக்கி மூலமே எதிர் கொள்ள வேண்டும் என எண்ணிச் செயல்பட்டவர்கள் இவர்கள். இவர்களுள் ஒருவர்தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என அழைக்கப்பட்ட வங்கம் தந்த சிங்கம்.
ஆங்கிலேயன் வழங்கிய ஐ.சி.எஸ் பட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தியர்களை ஒடுக்கும் ஆங்கிலேயரை அணு ஆயுதங்களால் எதிர்க்க வேண்டும் எனத் துணிந்து ஜப்பானியர் உதவியுடன் இந்திய தேசியப் படையை உருவாக்கினார். அங்கிருந்தே ஆங்கிலேயரை எதிர்கொண்டார். இவருடைய உணர்ச்சி மிக்க தீவிர நிலையை காந்தியடிகள் ஏற்காவிட்டாலும் அவரையே தனது குருவாகப் போற்றி மகிழ்ந்தார் நேதாஜி.
இத்தகைய தியாகியினுடைய வீரவரலாற்றை இளைஞர்கள் மனங்களில் விதைக்கும் வண்ணம் உணர்ச்சி பொங்கும் நடையில் பன்னூல் திறம் வாய்ந்த ஆசிரியர் திரு. பட்டத்தி மைந்தன் அவர்கள் எழுதியுள்ளார். இளைஞர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு தியாக உணர்வை வளர்க்க உதவும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பட்டத்தி மைந்தன் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :