நெடுநல்வாடை

ஆசிரியர்: யாழ்.சு.சந்திரா

Category கட்டுரைகள்
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaperback
Pages 92
Weight100 grams
₹50.00 ₹45.00    You Save ₹5
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மதுரை மீனாட்சி அரசினர் கலைக்கல்லூரியில் பணிபுரியும் முனைவர் யாழ்.சு.சந்திரா அவர்கள் எழுதியுள்ள “நெடுநல்வாடை விளக்கமும் நயவுரையும்” நூலைக் கண்டேன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொன்மங்கள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். முனைவர் யாழ்.சு.சந்திரா அவர்கள் தன்னை ஓர் உரையாசிரியராகவும் இந்நூலின் வழி இனங்காட்டுகிறார்.
நூலின் முகப்பாக அமைந்துள்ள நக்கீரர் வரலாறு, பாண்டியன் நெடுஞ்செழியன் வரலாறு, நெடுநல்வாடையின் திணையும் துறையும், நெடுநல்வாடை ஓவியப்பாட்டு முதலிய கட்டுரைகள் நூலாசிரியரின் உழைப்புக்கு அடையாளமாகத் திகழ்கின்றன. நெடுஞ்செழியன் பற்றிச் சங்க இலக்கியங்களில் காணலாகும் செய்திகளைப் பரவலாகத் தொகுத்து ஒரு கட்டுரையில் கோர்வையாகக் கொடுத்துள்ளார் இம் முயற்சி பாராட்டுக்குரியது. நெடுநல்வாடை திணையும் துறையும் என்ற கட்டுரையில் நெடுநல்வாடை அகப்பாடல்தான் என்று நிறுவுவதற்குப் பெரும் முயற்சி செய்துள்ளார். “வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகமொடு” என்ற தொடரை அடிப்படையாக வைத்து இப்பாடல் புறத்திணையைச் சார்ந்தது என்று நச்சினார்க்கினியர் கூறும் கருத்தை இந்நூலாசிரியர் மறுக்கும் முறைமை குறிப்பிடத்தக்கது. ஓர் அரசனுக்குரிய அடையாளப்பூ அவனது மரபைச் சார்ந்த ஏனைய குறுநில மன்னர்களுக்கும் உரியதாகக் கருதப்பட்டது என்ற கருத்தை முன்னிறுத்தி வேம்பு பாண்டிய மன்னனை மட்டும் குறிப்பிடவில்லை என்று நிறுவுவதற்கு முயற்சி செய்கிறார். இவர் வாதத்திற்குத் துணையாகச் சேரர்களுக்குரிய பனம்பூ மாலையை அதியமான் நெடுமான் அஞ்சியும் சூடியிருப்பதாக எடுத்துக்காட்டுகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

மீனாட்சி புத்தக நிலையம் :