நெடுங்குருதி
ஆசிரியர்:
எஸ். ராமகிருஷ்ணன்
விலை ரூ.410
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF?id=1845
{1845 [{புத்தகம் பற்றி வேம்பலையின் மீது படர்ந்திருப்பது யாராலும் தீர்க்க முடியாத சாபத்தின் துர்கனவு. தலைமுறைகளாக இக்கனவைக் கடந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாதைகளும் ஏக்கங்களும் நிலைகொள்ள முடியாத தத்தளிப்புகளும் ஆசாபாசங்களின் இருளும் வெளிச்சமும் இந்நாவலில் முடிவற்ற குருதிப் பெருக்காகின்றன. பொருளற்ற வாழ்வும் மரணமும் தங்கள் வசியக் குரலால் வேம்பலையை நோக்கி மனிதர்களை அழைத்துக் கொண்டே இருக்கின்றன. ஒரு பிரமாண்டமான கனவின் திரைமீது அறியப்படாத யதார்த்தம் ஒன்றை எழுதுகிறது எஸ்.ராமகிருஷ்ணனின் இந்நாவல். வாசகர்களின் பெரும் கவனத்திற்கும் தீவிர வாசிப்பிற்கும் உரியதாக இருந்த நெடுங்குருதி இப்போது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866