நெஞ்சுக்கு நீதி பாகம்-4

ஆசிரியர்: கலைஞர் மு. கருணாநிதி

Category கட்டுரைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatHard Bound
Pages 630
Weight900 grams
₹470.00 ₹446.50    You Save ₹23
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'நெஞ்சுக்கு நீதி ' நான்காவது பாகத்தில் உங்கள் விழி மலர்கள் விரிகின்றன.
முதற்பாகம், நான் பிறந்த 1924ஆம் ஆண்டு முதல் 1969 வரையிலான என் வாழ்க்கை வரலாற்றையும், என் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்த இயக்க வரலாற்றையும் மற்றும் உலக வரலாற்றுக் குறிப்புகளையும் உங்களுக்குச் சுட்டிக் காட்டுவதாகும்.
1969 முதல் 1976 வரை ஏழாண்டுக் கால வரலாற்றுக் குறிப்புகளையும், என் வாழ்க்கைக் குறிப்புகளையும் தொகுத்தளிப்பது தான் 'நெஞ்சுக்கு நீதி' இரண்டாம் பாகம்.
1976க்குப் பிறகு 1991 வரையிலான 15 ஆண்டுக் கால சரித்திர நிகழ்வுகளை நினைவூட்டுவது தான் நெஞ்சுக்கு நீதியின் மூன்றாம் பாகம். மூன்றாம் பாகத்தில் 1988ஆம் ஆண்டு வரையிலான சம்பவங்கள் தான் முழுமையாக எழுதப்பட்டுள்ளன.
எனவே இந்த நான்காம் பாகத்தில் 1989 முதல் 1996ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வுகள் முறையாகத் தொகுக்கப்பட்டு, இறுதி அத்தியாயத்தில் அதற்குப் பிறகு நடந்த முக்கிய நிகழ்வுகள் சுருக்கமாக தரப்பட்டுள்ளன.
இந்த வாழ்க்கை வரலாற்று நூலில் முதல் பாகம் 755 பக்கங்கள்; இரண்டாம் பாகம் 586 பக்கங்கள்; மூன்றாம் பாகம் 612 பக்கங்கள். நான்காம் பாகம் 633 பக்கங்கள் என மொத்தம் 2586 பக்கங்கள் என அமைந்துள்ளது.
நான்காம் பாகத்தை என் எண்பதாவது அகவையில் அடியெடுத்து வைத்திடும்போது உங்களிடம் தந்துள்ளேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கலைஞர் மு. கருணாநிதி :

கட்டுரைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :