நெஞ்சுக்கு நீதி பாகம்-1

ஆசிரியர்: கலைஞர் மு. கருணாநிதி

Category கட்டுரைகள்
FormatHard Bound
Pages 753
Weight850 grams
₹580.00 $25    You Save ₹29
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மெல்லத் தவழும் தென்றல் காற்று பூஞ்சோலையில் நுழைந்து அன்றலர்ந்த மலர்களின் நறுமணத்தை அள்ளிக் கொண்டு புதிய சுகந்தத்துடன் வெளிக் கிளம்புகிறது. அதைப் போலவே தமிழ் மொழியும் கலைஞரின் நாவிலும், பேனாவிலும் புகுந்து வெளிக்கிளம்பும்போது கற்பனை நயத் தையும் கருத்துச் செறிவையும் சுமந்துகொண்டு, எழிலார் நடையிட்டு வருகின்றது.
சொற்பொழிவு, கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், திரைக்கதை உரையாடல்; கட்டுரை, தலையங்கம், கடித இலக்கியம் என்று பல்வேறு இலக்கியத்துறைகளிலும் புகழொடு தோன்றிப் புதிய சாதனைகளைப் படைத்த கலைஞர், அரசியலில் மட்டுமன்றி இலக்கியத்திலும் தலைமைச் சிறப் புடையவர்.
கலைஞரின் பழுத்த அரசியல் அனுபவமும் முதிர்ந்த இலக்கியப் புலமையும் ஒருங்கிணைந்ததன் விளைவே அவரது "நெஞ்சுக்கு நீதி” எனல் மிகையன்று.
ஏனைய இலக்கியங்களைக் காட்டிலும் சுயசரிதை இலக் கியம் 'ஒரு தனிச் சிறப்புடையது. நாவல், நாடகம், சிறுகதை போன்றவை சாதாரணமானவர்கள் புகழ்பெறக் காரணமாகின்றன. ஆனால் புகழ்பெற்றவர்கள் மற்றவர் களோடு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள எழுதப் படுபவை 'சுயசரிதை'. எனவே சுயசரிதை நூல்கள், இலக்கிய மாக மட்டுமின்றி, வரலாறாக, சமூக மாற்றங்களக் குறித்த சாசனமாக, காலப்பெட்டகமாக விளங்கும் ஆற்றல் மிக்கலை.

உங்கள் கருத்துக்களை பகிர :
கலைஞர் மு. கருணாநிதி :

கட்டுரைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :