நுண்வெளி கிரகணங்கள்

ஆசிரியர்: சு.வேணுகோபால்

Category நாவல்கள்
Publication தமிழினி
FormatHard bound
Pages 430
First EditionSep 1995
2nd EditionDec 2017
Weight600 grams
Dimensions (H) 23 x (W) 2 x (D) 4 cms
₹400.00 $17.25    You Save ₹20
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இலக்கியம் என்பது மனித அகத்தில் அடைந்துபோய் விட்டிருக்கும் கீழ்மை, கெடுதல் முதலியவற்றைத் தயவு தாட்சண்யமின்றி வெளிப்படுத்தி, மறுக்க இயலாத கவனத்தில் கொண்டுவந்து உணர்வில் நிறுத்தி, அதனால், மனித உள்ளத்தைத் தூய்மையுறச் செய்யும் ஒரு மார்க்கம் என்னும் பொருள்பட 'Catharsis' என்று அரிஸ்டாடில் கூறும் இயக்கத்தை சு.வேணுகோபாலில் முழுமையாகக் காணலாம். சாதாரணமாக இதுவரையில் ராமாயணம் படித்திருக்கிறாயா, பாரதம் படித்திருக்கிறாயா, இந்தக் காவியம். அந்தக் காவியம், ஐம்பெரு. ஐஞ்சிறு.. என்றெல்லாம் சொல்வார்கள். அதாவது ஒருவர் நன்கு கற்றதற்கு, தமிழ் இலக்கியத்தில் அடையாளமாக. இனிமேல் அதற்குப் பதில். ஏன் அதற்கெல்லாம் மேலாக, 'சு.வேணுகோபால் படித்திருக்கிறாயா' என்று கேட்கலாம் போல் இருக்கிறது, சு.வேணுகோபாலைப் படிக்காமல் நம் காலத்துத் தமிழ் இலக்கியம் படித்திருப்பதாக ஒருவர் சொன்னால் அவருடைய நவீன தமிழிலக்கியப் படிப்பு மூளிதான் என்று சொல்வேன். காரணம் சு.வேணுகோபாலுடைய இலக்கியப் படைப்பு என்பது வாழ்வு என்னும் முடிவற்ற மூலக்கருவிலிருந்து முகச்சாயம் கூடப் பூசாமல் உருவெடுத்து வந்து நம்மைச் சந்திக்கும் சுய கெளரவம் மிக்க எழுத்துகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சு.வேணுகோபால் :

நாவல்கள் :

தமிழினி :