நீள் விழி

ஆசிரியர்: சாண்டில்யன்

Category நாவல்கள்
FormatPaper back
Pages 240
Weight200 grams
₹120.00 $5.25    You Save ₹6
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கி.பி. ஆறாவது நூற்றாண்டின் இடைப் பகுதியிலிருந்து சுமார் முந்நூறு ஆண்டுகள் வரை, பாதாமி சாளுக்கியர், காஞ்சி பல்லவர், மதுரைப் பாண்டியர் ஆகிய மூன்று அரசுகளும் தங்கள் நிலையை வல்லரசுகளாக உயர்த்திக் கொள்ள இடை விடாது போர் புரிந்துகொண்டிருந்தன. இந்த மூன்று அரசுகளில் முதலில் சளைத்துப் போட்டியிலிருந்து நீங்கியது சாளுக்கிய அரசு. பிறகு போட்டி பல்லவருக்கும் பாண்டியருக்கும் இருந்து வந்தது. இந்தப் போட்டியில் பல்லவர் வலுவாயிருந்த காலத்தில், இரண்டாவது நந்திவர்மன் பெயர் பிரபலமாகி, சரித்திரத்திலும் ஆழ்வார் பாடல்களிலும் இடம் பெற்றிருந்த காலத்தில், பாண்டிய ஜடில பராந்தக நெடுஞ்சடையன் தெற்கே தலை தூக்கினான். அவனை அடக்க தெற்கே வந்த நந்தி வர்மனை, காவிரிக்குத் தென்கரையிலிருந்து பெண்ணாகடம் என்ற இடத்தில் ஜடிலன் எதிர்கொண்டு அவனை முறியடித்தான். இந்தச் சம்பவம் கி.பி. 775-வது ஆண்டில் நடந்தது. பாண்டியனை வெல்ல, கொங்கு நாட்டு மன்னனுடனும் சேரனுடனும் பல்லவன் ஒப்பந்தம் செய்துகொண்டான். ஆனால் அவர்களையும் நெடுஞ்சடையன் வெற்றி கொண்டான். கொங்கு மன்னனை சிறைப் பிடித்து மதுரைக்கும் அனுப்பிவிட்டான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாண்டில்யன் :

நாவல்கள் :

வானதி பதிப்பகம் :