நீள் விழி

ஆசிரியர்: சாண்டில்யன்

Category சரித்திரநாவல்கள்
Publication வானதி பதிப்பகம்
FormatPaperback
Pages 240
Weight200 grams
₹130.00 ₹117.00    You Save ₹13
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்த சரித்திரக் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு 'நீள்விழி' யின் கதை இயற்றப்பட்டிருக்கிறது. பாண்டியர்களின் முதல் சாம்ராஜ்யம் அமைக்கப்பட்ட காலம் இது. இந்தக் கதையில் பிரதான பாத்திரங்களான ஜடிலன், நந்திவர்மன், மாறன்காரி மூவரும் சரித்திரத்தில் பிரசித்தி பெற்றவர்கள். கதையின் அவசியத்தையொட்டி நீள்விழி, விஜயன் இருவரும் சிருஷ்டிக்கப்பட்டார்கள்.
பெண்ணாகடம் என்ற ஊர் தஞ்சைக்கருகில் காவிரிக்குத் தென்புறத்திலிருந்ததாக சரித்திரம் குறிப்பிட்டாலும், திட்டமாக அது எந்த ஊர், எப்படியிருந்தது என்று தகவல் கிடையாது. அந்த ஊரின் பெயரை வைத்து அதற்கு ஓர் உருக்கொடுத்து, அங்கு விளைந்த மாபெரும் போரை வைத்து அதற்கு கோட்டை கொத்தளங்கள் அமைத்து, நீள்விழியின் கதை எழுதப்பட்டிருக்கிறது.
இது ஒரு சிறு நாவல். நிகழ்ச்சிகள் எல்லாம் அநேகமாக பெண்ணாகடத்திலேயே துவங்கி அங்கேயே முடிவடைந்து விடுகின்றன. அறிவிலும் வீரத்திலும் சிறந்து விளங்கிய தமி ழகத்தின் இரு பெரும் மன்னர்களைப் பற்றிய கதை இது. இந்தக் கதை மலேசியா தமிழ் நேசன் பத்திரிகையில் ஆறுமாத காலம் தொடர்கதையாக வெளிவந்தது. இந்தக் கதையை மலேசியா தமிழர்களைப் போலவே நீங்களும் சுவைத்துப் படிப்பீர்களென எதிர்பார்க்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாண்டில்யன் :

சரித்திரநாவல்கள் :

வானதி பதிப்பகம் :