நீலரதி

ஆசிரியர்: சாண்டில்யன்

Category சரித்திரநாவல்கள்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 476
First EditionOct 1985
7th EditionJan 2017
Weight300 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
$9       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

முன்னுரை தமிழ்நாடு முழுவதையும் களப்பிரர் அடிமைகொண்டு மூவேந்தரையும் சிறையில் அடைத்த காலம். அதைப் பின்னணி யாகக்கொண்டு இந்த வரலாற்று நாவல் புனையப்பட்டிருக்கிறது. புகாரில் முதலில் அரசாண்ட களப்பிரர் பிறகு உறையூரைத் தலைநகராகக்கொண்டு அரசு செலுத்தினார்களென்பதும் அவர்களில் ஒருவனான அச்சுதவிக்கண்டன் என்னும் அச்சுதவிக்ராந்தன் கடுமையாக அரசாண்டானென்பதும் நீலகண்ட சாஸ்திரி அவர்களின் “Cholas” (சோழர் வரலாறு) என்ற நூலில் காணப்படுகிறது. புகாரில் இருந்த கண்ணதாசன் மடத்தில் புத்ததத்தர் என்ற பௌத்த துறவி இருந்ததற்கும் அவர் இயற்றிய நூலைப் பற்றியும் சாஸ்திரிகளின் சோழர் வரலாற்றில் குறிப்புகள் தெளிவாகக் காணப்படுகின்றன. தமிழர் எகிப்து முதலிய நாடுகளுடன் வணிகத் தொடர்பு வைத்துக் கொண்டிருந்ததும் சரித்திரத்தில் திட்டமாயிருக்கிறது. எகிப்து நாட்டுக் கலாச்சாரத்தில் ஐஸிஸ் என்ற தேவதையைப் பற்றிய விவரங்கள் அவர்கள் நாட்டுப் புராணங்களில் காணப்படுகின்றன.
அந்த நாட்டுத் தேவதையையும் தமிழ்நாட்டுக் களப்பிரர் காலத்து வரலாற்றுச் சம்பவங்களுடன் இணைத்து இந்தக் கதையை எழுதியிருக்கிறேன். இந்தக் கதை 'குங்குமம்' பத்திரிகையில் வந்த காலத்தில் தமிழர்கள் இதைப் பெரிதும் வரவேற்றார்கள். கதையின் ஆரம்பத்தில் தோன்றும் நாத்திகனைப் பற்றியும், ஐஸிஸ் தேவதையின், பாதுகாப்பைப் பெற்ற நீலரதியைப் பற்றியும், கொடுங்கோலனான அச்சுதவிக்கண்டனைப் பற்றியும் இது தொடர்கதையாக வந்த காலத்தில் மக்கள் ரசித்துப் படித்தார்கள். இப்பொழுது அது புத்தக வடிவில் வருவதால் மற்ற நூல்களைப் போலவே இதற்கும் பூர்ண ஆதரவை அளிப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை .
இந்தப் பெரிய நாவலை முதலில் கதையாகப் பிரசுரித்த குங்குமம் ஆசிரியருக்கும், புத்தக வடிவில் இதைக் கொண்டுவரும் பாரதி பதிப்பக நிர்வாகி பழ. சிதம்பரம் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சென்னை -17 18-10-85
சாண்டில்யன்

உங்கள் கருத்துக்களை பகிர :