நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ?

ஆசிரியர்: சத்குரு

Category
Publication ஈஷா அறக்கட்டளை
FormatPaper Back
Pages 72
Weight100 grams
₹40.00       Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ?

நான் நல்லவன் என்று நீங்கள் சொல்லும் அந்த ஷணமே, இந்த உலகை இரண்டாகப் பிரிக்கிறீர்கள். 'நல்லது' என்று அழைக்கப்படுவதுடன் நீங்கள் எந்த அளவு உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு 'கெட்டது' என்று அழைக்கப்படுவதுடன் தடையை உருவாக்கிக் இருக்கிறீர்கள்.
நல்ல மனிதர் என்பவர் எல்லா கெட்ட விஷயங்களையும் அறிந்திருப்பார். எனவே அந்த கெட்ட விஷயங்களைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளைத்தான் அவர் மேற்கொள்வார். நீங்கள் ஒன்றைத் தவிர்க்கிறீர்கள் என்றால், எப்போதும் அதை நினைத்துக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. அப்படியானால் நீங்கள் அவற்றிலிருந்து விடுதலை அடையவில்லை என்பதுதான் பொருள்.
உங்களை மிகவும் மகிழ்ச்சியானவராக மாற்றிக் கொண்டால், உங்களிடம் வேறென்ன முட்டாள்தனங்கள் இருந்தாலும் மக்கள் அதை ஒதுக்கிவிடத் தயாராக இருக்கிறார்கள், இல்லையா? உங்களுள் ஒரு மலர் மலர்ந்திருந்தால் உங்களுள் உள்ள எல்லா முட்களையும் மறக்கத் தயாராக இருக்கிறார்கள். நீங்கள் முட்களைப் பிடுங்க ஆரம்பிக்கிறீர்கள், அது ஒரு முடிவில்லாத செயல்முறை. அது நடக்கப் போவதில்லை.
தொடர்ந்து மகிழ்ச்சியற்ற விஷயங்களையே உங்கள் வாழ்க்கையில் வருவித்துக் கொள்கிறீர்கள் எனக் கண்டுகொண்டால், காரணமோ இல்லாமல் தவறான மனிதர்கள் மற்றும் தவறான சூழ்நிலைகளையே சந்திக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொண்டால், செய்ய வேண்டிய மிக முக்கியமான செயல், அமர்ந்து, தியானத்தில் ஆழ்ந்து, விழிப்புணர்வு இல்லாமல் உங்களால் எழுதப்பட்ட இந்த மென்பொருளை எப்படி மாற்றியெழுதுவது என்று பார்க்க வேண்டும். இது மிகமிக முக்கியமானது.
சத்குரு

உங்கள் கருத்துக்களை பகிர :
சத்குரு :

ஈஷா அறக்கட்டளை :