நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள் பாகம் 1

ஆசிரியர்: ஓஷோ

Category தத்துவம்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaper back
Pages 360
First EditionJan 2017
2nd EditionNov 2017
ISBN978-81-8402-802-4
Weight400 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 3 cms
₹210.00 ₹199.50    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கிரேக்க நாடு உலகிற்கு அளித்த அதிமுக்கியத்துவம் பெற்ற மனிதர்களில் பிதாகரஸ் ஒருவர். கிரேக்கம் உலகிற்குத் தந்த அந்த சிறந்த அறிவாளிகள் குறித்து ஏனோ அதிகம் பேசப்படவில்லை. 'நித்தியமான புனிதப் பயணம்' என்ற நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவத்தைப் பிதாகரஸ் எடுத்துக் கூறுகிறார். சிறந்த உண்மைகளைத் தேடியலையும் ஆர்வம் கொண்டவராக அவர் இருந்தார். தனது தேடலுக்காக எதையும் பணயம் வைக்கத் தயாராக இருந்தார். நாலாபுறங்களிலும் பயணம் மேற்கொண்டார்.
பல வருடகாலம் அவர் இந்தியாவில் இருந்தார். பின்னர் திபெத்துக்குப் பயணமானார். அப்புறம் சீனா சென்றார். உலகம் என்பது அன்றைய நாளில் அவ்வலைதான். தனது வாழ்நாள் முழுவதும் அவர் தத்துவத்தைத் தேடி அலைந்த ஒரு புனிதப் பயணியாக இருந்தார்.
பிதாகரஸ் இறந்துபோன அன்று அவரது ஆயிரக்கணக்கான சீடர்கள் சாகடிக்கப்பட்டார்கள், எரித்துக் கொல்லப்பட்டார்கள். மடாலயத்திலிருந்து ஒரே ஒரு சீடர்தான் தப்பினார். அவர் பெயர் லைசிஸ் என்பதாகும். தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர் தப்பியோடவில்லை. தனது குருவின் போதனை கவில் சிலவற்றை பாதுகாக்கும் பொருட்டு தப்பியோடினர். தப்பிப் பிழைத்த ஒரே சீடரான அவர் எழுதி வைத்ததுதான் Golden Verses of Pythagoras' என்ற தொகுப்பாகும்.
அந்த உயர்ந்த மேதாவிலாசத்தையும், சிறந்த தனித்துவத்தையும் கண்டறிந்து விமர்சித்த முதல் மனிதன் நான்தான். இந்திய மறை நூல்களில் காணப்படும் அம்சங்களை மேலும் சிறப்பான வகையில் அவர் எடுத்து உரைத்திருப்பதை நீங்கள் காணலாம். எனென்றால் இந்திய மறை நூல்கள் பெரிதும் கவித்துவம் கொண்டவை. ஆனால் அவர் ஒரு கிரேக்கர். தர்க்கரீதியான ஆழ்ந்த சிந்தனை கொண்டனர். நிஜமான அறிவியல் பார்வை கொண்டனர்.
சூத்திரங்கள் ஒரு சில மட்டுமே உள்ளன. பிதாகரஸின் சூத்திரங்கள் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மூன்று புகழ்பெற்ற பி-க்கள் என்று அழைக்கப்படுகின்றன. Preparation (ஆயத்தமாதல்), Purification (தூய்மைப்படுத்திக் கொள்ளல்). Perfection (பூரணத்துவம் பெறுதல்) என்பவையே அந்த மூன்று ந-க்கள் ஆகும்.
ஓஷோ ஞானமடைந்த ஒரு ஞானியின் பார்வையில்

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

தத்துவம் :

கண்ணதாசன் பதிப்பகம் :