நிலவளம்
ஆசிரியர்:
நட் ஹாம்சன்
தமிழில் : க.நா.சுப்ரமண்யம்
விலை ரூ.300
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D?id=2+5724
{2 5724 [{புத்தகம்பற்றி திடல்களைத் தாண்டிக் காட்டுக்குள் ஓடும் நீண்ட நெடிய பாதையைப் பாதையாக்கிச் செப்பனிட்டது யார்? யாரோ ஒரு மனிதன். அந்தப் பக்கம் வந்த முதல் மனிதன் அப்பாதை வழியே நடந்தான். அவன் வருவதற்கு முன் அங்கே பாதையே இல்லை. அதற்குப் பிறகு ஏதோ பிராணி அந்த வழியே நடந்திருக்கும்; சதுப்புப் பிரதேசத்தையும் புல் தரையையும் கடந்து நடந்திருக்கும்; பாதை தானாகவே ஆழ்ந்து நிலைத்துவிட்டது. பிறகு நாடோடிகளான லாப்களில் சிலர் அந்தப் பாதையிலே நடந்திருப்பார்கள்; அவர்கள் எங்கும் நிலைத்து நிற்காதவர்கள்; இன்று ஓரிடம் நாளை ஓரிடம் என்று தங்கள் மிருகங்களை ஓட்டிக்கொண்டு திரிந்து கொண்டிருப்பார்கள். அகண்ட பிரும்மாண்டமான ஆல்மென்னிங் பிராந்தியத்துப் பாதை இப்படி உண்டானதுதான். அந்தப் பிரதேசத்து நிலங்களுக்குச் சொந்தக்காரர்கள் யாரும் இல்லை ; அந்தப் பரந்த பூமியை ஆள மனிதன் எவனுமில்லை .
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866