நினைவில் நிறைந்தவை

ஆசிரியர்: ஸ்ரீமதி. T.R.கனகம்மாள்

Category ஆன்மிகம்
Publication ஸ்ரீரமணாச்ரமம்
FormatPaperback
Pages 289
ISBN978-81-8288-027-6
Weight350 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஸ்ரீ ரமண பகவானின் அருட் சந்நிதானத்தில் திளைத்த பக்தர்கள் யாவரும் பெரும் பாக்கியசாலிகள்! அந்த அருள் நிறைவான அமுதக் கடலில் மூழ்கி, பக்திப் பிரவாஹத்தின் ஆனந்தத்தில் திக்குமுக்காடிய ஞானச் செல்வர்கள் போற்றற்குரியவர்கள். நமது வணக்கத்துக்குரியவர்கள்.இச்சீரிய ரமண பக்தர்கள், யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்னும் சிறந்த நோக்குடன் தங்களது ரமண நினைவுகளைப் பிற அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முன் வந்ததே ஸ்ரீ ரமணத் திருவருள்தான். அத்தகைய அன்பர்களின் நினைவுப் பொக்கிஷங்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாகப் புத்தக வடிவம் கொடுக்கப்பட்டு ஆச்ரம வெளியீடுகளாகத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.ரமண நினைவுகள் தொடரில், ஸ்ரீமதி கனகம்மாள் அவர்களின் ‘நினைவில் நிறைந்தவை'ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. முதுபெரும் ரமண பக்தர்களுள் மிக இளையவரான இவரது ரமண நினைவுகள் பசுமையானவை. ஸ்ரீ பகவானைப் பற்றி இவர் பேசத் தொடங்கினால் அன்னாரது அருள் வடிவையே கேட்போர்முன் கொண்டு நிறுத்தி விடும் வல்லமை வாய்ந்தது இவரது ரமண பக்தியின் நிறைவு.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ரீமதி. T.R.கனகம்மாள் :

ஆன்மிகம் :

ஸ்ரீரமணாச்ரமம் :