நினைவின் நதியில்

ஆசிரியர்: ஜெயமோகன்

Category கட்டுரைகள்
Publication நற்றிணை பதிப்பகம்
Pages 240
Weight400 grams
₹220.00 ₹209.00    You Save ₹11
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இந்நூலில் நான் இருந்துகொண்டே இருக்கிறேன். நான் இல்லாத இடமே இல்லை. ஏனென்றால் இது சுந்தர ராமசாமியின் வரலாறு அல்ல. அவரைப்பற்றிய என் நினைவுகள்தான். நான் அவரை எதிர்கொண்ட புள்ளிகள் மட்டுமே இந்நூலில் உள்ளன. என் வயதின் முதிர்ச்சியின்மை, இயல்பான அசட்டுத்தனங்கள், அறி வார்ந்த தேடல், ஆன்மீகமான தத்தளிப்புகள் ஆகியவை யும் இணைந்தே இந்நூல் உருவாகியிருக்கிறது. 2005இல் எழுதப்பட்ட இந்நூலை இன்று வாசிக்கும் போது இது ஜே.ஜே. சில குறிப்புகள் போன்ற ஒரு புனை வாகவும் வாசிக்கப்படலாமென தோன்றுகிறது. பல இடங்களில் நானே புன்னகை செய்துகொண்டேன். சில இடங்களில் ஆழ்ந்த மனநெகிழ்ச்சியையும் அடைந்தேன். உதாரணமாக, சுந்தர ராமசாமி ஆலமரத்தைப் பார்க்கும் இடம். அது ஒரு மிகச்சிறந்த நாவலின் தருணத்துக்கு நிகரானது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெயமோகன் :

கட்டுரைகள் :

நற்றிணை பதிப்பகம் :