நிச்சய வெற்றி

ஆசிரியர்: பிராகாஷ் ஐயர்

Category மொழிபெயர்ப்பு
Publication விகடன் பிரசுரம்
Pages N/A
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வெற்றி பெறுவது எப்படி, எப்போதும் வெற்றி என்பதை வழக்கப் படுத்திக்கொள்வது எப்படி, போராட்டமான பணியிலும் அதை நிச்சய வெற்றியாக்குவது எப்படி என்று லட்சிய வாழ்க்கை வாழ விரும்பும் இளைஞர்களுக்கு அருமையான வழிகாட்டி இந்த நூல். சூடான நீருக்கும், ரயிலை நகர்த்தும் நீராவிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப்போல உங்கள் வாழ்க்கையில் வெற்றிகளும் அப்படி ஒரு சின்ன இடைவெளியில்தான் இருக்கும். ஒரு நொடிக்கும் குறைவான நொடிதான், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரையும், தோல்வி அடைந்தவரையும் வித்தியாசப்படுத்துகிறது.பசையைக் கண்டுபிடித்த டாக்டர் ஸ்பெனிஸ் சில்வர், கணக்கில் வீக் கான சச்சின் டெண்டுல்கர், பத்தாவது பாஸ் பண்ண முடியாமல் முட்டி மோதிக்கொண்டிருந்த திருபாய் அம்பானி என, இப்போது உச்சத்தில் இருக்கும் பலரும் தங்கள் குறைகளைக் கடந்து சாதனை புரிந்தவர்கள்தான்.வளர்ந்துவரும் இளைஞர்கள், தலைவர்களாகவும் வெற்றியாளர்களாகவும் தங்களை உருமாற்றிக்கொள்ளத் தேவையான அனைத்துத் தகவல்களையும், தன் அனுபவங்களோடு எளிமையாக விளக்குகிறார் நூலாசிரியர் பிரகாஷ் ஐயர்.Penguin பதிப்பகம் வெளியிட்ட The Habit of Winning என்ற ஆங்கில நூலை, அழகான தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ந.வினோத்குமார். கருவேலங்காட்டுக்குள் வாழும் வண்ணத்துப்பூச்சியைப் போல்தான் நம்முடைய வாழ்க்கையும் சவால்களால் நிரம்பி இருக்கிறது. சவால்களை எதிர்கொள்ளும் சக்தியாகவும், சாதனைக்கான யுக்தியாகவும் இந்த நூல் நிச்சயம் விளங்கும்!

உங்கள் கருத்துக்களை பகிர :
மொழிபெயர்ப்பு :

விகடன் பிரசுரம் :