நாமக்கல் கவிஞர்

ஆசிரியர்: பட்டத்தி மைந்தன்

Category வாழ்க்கை வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
Format Paperback
Pages 144
Weight200 grams
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தன்னுடைய வாழ்வுக்கு ஆதாரமாக இருந்து வந்த ஓவியத் தொழிலை அறவே விட்டுவிட்டுப் பாடல்கள் எழுதவும், காப்பியங்கள் படைக்கவும் செய்துவந்த நிலையில் வறுமை வந்த போதிலும் பிள்ளையவர்கள் கவலைப்படவில்லை. காரணம் அவர் அடிக்கடிச் சொல்லி வந்ததுபோல “என் வறுமையை நானே வருவித்துக் கொண்டதுதான்'' என்பது தான் உண்மை .
அவர் தாம் பெரிதும் விரும்பியதுபோல இறுதிக் காலத்தில் புகழ்பெற்ற ஒரு கவிஞராகவே திகழ்ந்தார். அவருடைய நூல்கள் பல வெளிவந்ததே அவருக்கு மனத் திருப்திதான். அவரைச் சிறந்த கவிஞர்களில் ஒருவர் என்று தமிழகம் பாராட்டி மகிழ்ந்தது.
பணமுடிப்பை அளிப்பதைவிடவும் இதய பூர்வமான பாராட்டைத்தான் ஒரு கவிஞன் உண்மையில் விரும்புவான்.அது அவருக்குக் கிடைத்தது. ஆகவே அவர் நல்ல மன நிறைவையடைந்தார் என்றே கூறலாம். தமிழகத்திலுள்ள புகழ்பெற்ற பதிப்பகங்கள் பல ராமலிங்கம் பிள்ளையின் நூல்களை வெளியிட்டு மகிழ்ந்தன.

உங்கள் கருத்துக்களை பகிர :
பட்டத்தி மைந்தன் :

வாழ்க்கை வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :