நான் ப்ரம்மம்
ஆசிரியர்:
ஸ்ரீ நிசர்கதத்த மஹராஜ்
விலை ரூ.250
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D?id=1448-2509-9958-8928
{1448-2509-9958-8928 [{புத்தகத்தைப் பற்றி இந்தியாவின் மாபெரும் ஞானிகளுள் ஒருவரான ஸ்ரீ நிசர்கதத்த மஹராஜ் அவர்களின் காலவரம்பற்ற உபதேசங்களின் இந்தத் தொகுப்பு, அந்தத் தீர்க்கதரிசியின் வாழ்க்கைக்கும், செயல்பாட்டிற்கும் ஒரு அத்தாட்சி. ஆங்கிலத்தில் 'I am That' என்னும் புத்தகமாக 1973ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டதிலிருந்து சுயம் அறிதலில் தீவிர ஈடுபாடுடைய மெய்யார்வலர்களுக்கு ஞானத் தெளிவைக் கொடுத்து வருகிறது. ஸ்ரீ நிசர்கதத்தமஹராஜ் எந்த ஒரு சித்தாந்தத்தையோ, மதத்தையோ முன்வைக்கவில்லை. ஆனால் சுயம் பற்றிய புதிரை மென்மையாக விடுவித்தார். அவருடைய செய்தி எளிமையானது, நேரடியானது, உன்னதமானது. அந்த ஞானியின் தனித்த ஒரே அக்கறை மானிடத்தின் துன்பங்களைப் போக்குவதுதான். ஒருவருடைய மெய்யான இயல்பையும், காலவரம்பற்ற இருத்தலையும் புரியவைப்பதுதான் அவருடைய குறிக்கோள். மனம் அதன் சொந்த இருத்தலை அடையாளம் கண்டு, ஊடுருவி, 'இது அல்லது அதுவாக, இங்கு அல்லது அங்காக, அப்போது அல்லது இப்போதாக' அல்லாமல் வெறுமனே காலமற்ற இருத்தலாக அறியவேண்டும் என்று கற்பித்தார். தங்களுடைய பொய்யான அடையாளங்களை அழித்துக் கொள்ள மும்பையிலிருந்த அவருடைய வீட்டிற்கு உலகெங்கிலுமிருந்து வந்த பலதரப்பட்ட மெய்யார்வலர்களுக்கு, மெய்யான அனுபவத்திற்கு அப்பால் இருப்பது மனம் அல்ல - சுயம், ஒவ்வொன்றும் எதில் தெரிகின்றதோ அந்த ஒளி, ஒவ்வொன்றும் எதில் நிகழ்கிறதோ அந்தப் பிரக்ஞை' என்னும் நம்பிக்கையை அவர் கொடுத்தார். காலகாலமாக இருக்கும் 'நான் யார்?' என்னும் கேள்விக்கு வாசகர்கள் 'நான் ப்ரம்மம்' என்னும் இந்தப் புத்தகத்தில் பதில்களைக் கண்டு, தங்களையே தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். மகோன்னதமான ஞானப் பெட்டகத்தின் திறவுகோல் இதோ உங்கள் கைகளில்!
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866