நான் நம்மாழ்வார் பேசுகிறேன்...

ஆசிரியர்: சாவித்திரி நம்மாழ்வார்

Category வாழ்க்கை வரலாறு
FormatPaperback
Pages 295
ISBN978-81-8476-649-3
Weight300 grams
₹255.00 ₹242.25    You Save ₹12
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே செலவிட்டவர். இயற்கை விவசாயம் வேறு, நம்மாழ்வார் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு வாழ்ந்தவர்.
இயற்கை விவசாய வரலாறை ஆவணப்படுத்த வேண்டும் என்றால், அது நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு மூலமே பூர்த்தி அடையும். இதனால்தான் பசுமை விகடன் இதழில் நான் நம்மாழ்வார் பேசுகிறேன் என்ற தொடரை எழுதினார். 39 பாகம் வரை எழுதிய நிலையில், மீத்தேன் எதிர்ப்புப் பணிகளுக்காக டெல்டா மாவட்டத்தில் ஓயாத சுற்றுப்பயணத்தில் இருந்தவரை ஓய்வு கொள்ள இயற்கை அழைத்துக் கொண்டது. இதனால், நம்மாழ்வாருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலரிடம் இருந்து, அவருடைய வாழ்க்கை வரலாற்றை தெளிவாக தொகுத்திருக்கிறார் பசுமை விகடன் இதழின் பொறுப்பாசிரியர் பொன்.செந்தில்குமார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் மலேசியா போன்ற சில நாடுகளுக்கும் இயற்கை விவசாயத்தை நம்மாழ்வார் முன்னெடுத்துச் சென்றிருப்பது தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து, அவர் உருவாக்கி வைத்துள்ள இயற்கை வழி விவசாயிகளின் எண்ணிக்கை, அமுதக் கரைசலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பல்கி பெருகுவது போல பெருகிக்கொண்டே இருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் அழைத்துச் சென்ற நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு நல்ல நம்பிக்கை விதைக்கும் தன்னம்பிக்கை நூல்.
நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு பசுமை விகடன் இதழில் தொடராக வரும்போதே, எப்போது புத்தகமாக வரும்? என்று வாசகர்களிடம் ஏக்கத்தையும், தாக்கத்தையும் உருவாக்கியது. இப்போது புத்தக வடிவில் உங்கள் கைகளில்.

சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதுதான் இந்த முத்திரைகள்!. முத்திரைகள் மிகமிகத் தொன்மையானவை எனவும், நமது பழங்கால ரிஷிகளும், முனிவர்களும் தங்களது மெய்ஞானத்தால் முத்திரைகள் கண்டுபிடித்ததாகவும் சொல்கிறார்கள். பதஞ்சலி முனிவருக்கென ஒரு முத்திரை! புத்தருக்கென தனி முத்திரை! மகாவீரருக்கென தனி முத்திரை! இப்படியெல்லாம் முத்திரைகள் பலராலும் கையாளப்பட்டு வந்தாலும், இந்து புராணங்கள் நந்திதேவனால் மனிதர்களுக்கு முத்திரைகள் போதித்ததாக சொல்வார்கள். அதாவது '' சிவபெருமானின் ரூபவடிவமே நந்திதேவன். அனைத்துக் கலைகளும் நந்திதேவனிடமிருந்து உருவானதாக சொல்லப் படுகிறது. அதன்படி முத்திரைகளையும் கண்டுபிடித்து மனிதர்களுக்குக் கற்பித்தது நந்தி தேவனே என்று சொல்லப்படுகின்றது. நந்திதேவனுக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் பிரம்மி. இளையவள் சுந்தரி. மூத்த பெண்ணிற்கு மொழியை நந்திதேவன் கற்றுக் கொடுத்தான். அந்த மொழியே பிரம்மி மொழி என்பதாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வாழ்க்கை வரலாறு :

விகடன் பிரசுரம் :