நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்

ஆசிரியர்: டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் மொழிபெயர்ப்பு: தாயப்பன் அழகிரிசாமி

Category பகுத்தறிவு
Publication தலித் முரசு
FormatPaperback
Pages 175
Weight250 grams
₹200.00 ₹180.00    You Save ₹20
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஜாதி என்ற முதன்மை முரணில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் பெரும்பான்மையினரான தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் அனைவரும் 'இந்துக்கள் அல்லர்' என்று தன்னுடைய ஆய்வின் மூலம் நிறுவிய அம்பேத்கர், இம்மக்களை 'இந்துக்கள் அல்லாதவர்' களாக்கவே பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்துமயமாக்கல் தீவிரமடைந்து வரும் இன்றைய காலகட்டத்தில் அம்பேத்கரின் இச்செயல்திட்டமே அதைத்தடுத்து நிறுத்தும். இம்மாபெரும் புரட்சிக்கான வித்துக்கள் காலத்தின் அவசியம் கருதி தொகுக்கப்பபட்டுள்ளன. அதுமட்டுமல்ல, ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் ஜாதியை நியாயப்படுத்தி தங்களை நிர்வாணமாக்கிக் கொள்ளும் 'மனிதர்' களின் எண்ணிக்கை பெருகி, கடும் அச்சுறுத்தலை உருவாக்கி வருகிறது. இப்பேராபத்தையும் தடுத்து நிறுத்தும் ஆயுதமே இந்நூல்.

டாக்டர் அம்பேத்கர் 6.1.1936 அன்று கேரள மாநிலத்தில் ,உள்ள கொச்சியில் 'கேரளா தியா யூத் லீக்' கூட்டத்தில் உரையாற்றும் பொழுது, 'இந்து மதம் ஒரு தொற்று நோய்' என்றும் 'தாழ்த்தப்பட்ட மக்கள் பெருந்திரளாக மதம் மாற வேண்டும்' என்றும் அறிவுறுத்தியதாக 'இந்துஸ்தான் டைம்ஸ்' ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் :

பகுத்தறிவு :

தலித் முரசு :