நான் ஒரு அழைப்பு பாகம் 2

ஆசிரியர்: ஓஷோ

Category தத்துவம்
FormatPaperback
Pages 500
ISBN978-81-8402-078-6
Weight400 grams
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகாத்திருக்கக் கற்றுக்கொள். அமைதியாக, பொறுமையாய் இருந்து வாழ்விருப்பு உனக்கு எது அளித்தாலும் அதைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இரு. நீ செய்ய வேண்டியதெல்லாம் இன்னும் ஆழமாக தியானம் செய்வது, மனதைத் தாண்டி மௌனத்தில் ஆழ்ந்து, எந்த எண்ணமின்றி, எந்த வகை உணர்வுமின்றி, எந்த விதமான மனச் சலனமுமின்றி வெறுமனே அமைதியாக கவனமாகக் காத்திருப்பது மட்டுமேயாகும். வாழ்விருப்பு அப்போது எதற்கும் தயாராக நீ உள்ளாய் என்பதை அறிந்துகொள்ளும். பொலிவு வரும். ஆனால் அது வரும்போது ஒரு சின்ன முணுமுணுப்புக் கூட கேட்காது. திடீரென நீ அதை உணருவாய். ! அது உனக்குள் இருப்பதைக் காண்பாய். உனது அசைவுகளில் நீ அதை உணருவாய். உனது உறக்கத்தில் நீ அதை உணருவாய். உனது பேச்சில் நீ அதை உணருவாய். அனைத்து விதத்திலும் நீ அதனுள் மூழ்கடிக்கப்படுவாய். ஆனால் நீ உன் பங்கிற்குச் செய்ய வேண்டிய ஒரே விஷயம் ஆழ்ந்து காத்திருப்பதுதான். தியானம் கூர்ந்த கவனத்தை உருவாக்கும் நீ காத்திருக்கும் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

கேள்வி: பிரிய ஓஷோ ! சமுத்திரம் மிகக் கம்பீரமாக இருக்கின்றது... அலைகள் வந்து கொண்டே இருக்கின்றன, அலைகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் நானோ மறுபடியும் நீரற்ற நிலம் தேடித் தேடி ஓடிக்கொண்டே இருப்பது போலத் தோன்றுகிறது. என் இனிய ஓஷோவே, மூழ்குவது பற்றி இன்னுமோர் ஆழ்ந்த பாடம் கற்றுத் தருவீர்களா? ராதா! சமுத்திரத்தின் அழைப்பு வரும்போது அதிலிருந்து விலகி ஓடாதே! அந்தச் சமுத்திரம்தான் வாழ்வின் தொடக்கம், உவமையாக மட்டும் கூறவில்லை; உண்மை யாகவே உடலியல்படியும் சமுத்திரத்திலிருந்துதான் நாம் வந்துள்ளோம். அங்கு அழைப்பு வரும்போது நீரற்ற நிலத்தை நோக்கி ஓடுவது உனது சுய கல்லறையை நோக்கி ஓடுவது போலாகும். மயான பூமி மட்டுமே சமுத்திரத்திற்கு வெளியே இருக்கிறது. வாழ்வு என்பதே சமுத்திரமாக இருப்பதுதான். ஜேம்ஸ் என்பவர் சமுத்திரமாயிருத்தல் (Oceanic) சொல்லை உலகுக்கு அளித்துள்ளார். கடல் எப்போதுமே அங்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

தத்துவம் :

கண்ணதாசன் பதிப்பகம் :