நான்காம் தடம்

ஆசிரியர்: இரா.ஆனந்தக்குமார்

Category நாவல்கள்
Publication விஜயா பதிப்பகம்
FormatHardbound
Pages 672
Weight900 grams
₹600.00 ₹570.00    You Save ₹30
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமகரிஷியின் மரணானுபவமும், குர்ட்ஜிப்பின் மரண பயமும் ஒன்றே. ஆனால் அதன் பின் இருவரின் பயணமும் முற்றிலும் எதிர்த் துருவத்தில் ஒன்றோடொன்று முரண்பட்டுச் செல்வதை அறியலாம். இயற்கையில் அவ்வாறுதான் நிகழும் அது ஏன் ஒத்துப் போகவேண்டும் மனித மனம் மட்டுமே தான் ஏற்கனவே கற்றறிந்த, மூளையில் தேக்கிப் படிமானமாக்கப்பட்ட அனுபவங்களையே ஒப்பிட்டுத் தேடிக் கொண்டிருக்கும் ரமண மகரிஷியைப் பொறுத்தவரை இயற்கை அவரை எங்கும் செல்லாமல் ஓரிடத்திலேயே நிலைத்து அமர வைத்து அதனை முதிர வைத்தது. ஆனால் குர்ட்ஜிப்புக்கு அது முற்றிலும் மாறாக, உலகம் முழுவதும், aஅதுவும் ஆபத்தான போர்க்களங்களின் ஊடே உலா வர வைத்து, விரிசல் விடச் செய்தது இது ரமணருக்கும், குர்ட்ஜிப்பிற்கும் மட்டும் ஏற்படும் விரிசல் இல்லை ஒவ்வொருவரும் மனிதனுக்கும் தொடர்ந்து இது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது வெவ்வேறு வித அனுபவங்களினூடே, பயத்தினூடே, துயரத்தி னூடே, வறுமை யி னூடே, நெருக்கடி க ளி னூடே, அவமானங்கள் மற்றும் வலிகளினூடே, சுய மரண பயம் அல்லது , நெருங்கியவர்களின் மரணத்தினூடே அவ்வித விரிசல்கள் தொடர்ந்து, ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அதனுடைய அழுத்தம், மற்றும் தீவிரத்தினைப் பொறுத்து அந்த விரிசல்கள் உடைந்து உள்ளிருக்கும் பறவை வெளியேறும் காலம் மாறும்
இந்த இடத்தில் காலம்என்று குறிப்பிடுவது ஒரு மிகப் பெரிய முரண்தொகை. வேறு வழியின்றி ஒரு வார்த்தைப் பரிமாற்றத்திற்காக அதனை அவ்வாறு குறிப்பிட வேண்டியிருக்கிறது எதார்த்தத்தில் அது நேரெதிரானதாகும். விரிசல் விழுதலை மட்டுமே காலத்தால் குறிப்பிட இயலும். அப்போது மட்டுமே அதனை ஒரு நிகழ்வாகவ, அனுபவமாகவோசுட்ட இயலும். ஆனால் பறவை வெளியேறுவதை எவ்வித நிகழ்வாகவோ, அனுபவமாகவோ சுட்ட இயல்வதில்லை. காலக் கூறுக்குள் அடக்கவும் இயலுவதில்லை .

உங்கள் கருத்துக்களை பகிர :
நாவல்கள் :

விஜயா பதிப்பகம் :