நவீனகால இந்திய வரலாறு

ஆசிரியர்: டாக்டர் க.வெங்கடேசன்

Category வரலாறு
Publication வர்த்தமானன் பதிப்பகம்
FormatPaperBack
Pages 360
Weight350 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஆங்கிலக் கம்பெனி இந்தியாவுக்கு வந்து, வர்த்தகம் செய்து, குடியிருப்புகளை அமைத்து, பிற ஐரோப்பிய வர்த்தகக் கம்பெனிகளுடன் போட்டி போட்டு, இறுதியில் இந்தியாவை அக்கம்பெனியின் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்ததே இடைக்கால இந்தியா நவீன இந்தியாவாக உருமாற்றமடையக் காரணமாக இருந்தது.அன்றைய மதராசில் துவங்கிய ஆங்கிலேயர் ஆட்சி வங்காளத்தில் வெற்றிபெற்று இந்தியா முழுவதும் பரவியதற்குக் காரணம் இங்கிலாந்தின் கடலாதிக்கமும் ஆங்கில ஆளுநர்களின் ஆட்சித் திறமையும், இங்கிலாந்து அவர்களுக்கு அளித்த ஆதரவுமேயாகும். ஆங்கிலக் கம்பெனி ஆட்சிக்காலத்தில் பல புரட்சிகரமான சமூக சமய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவற்றுக்கு எதிர்வினையாக இந்தியப் பெருங்கிளர்ச்சி (1857) ஏற்பட்டது. இந்தியாவில் ஆங்கிலக் கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு பெற்றது.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். புதுடெல்லி பொது நிர்வாக கல்வி நிலையத்திலிருந்து பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும், புதுடெல்லி ஐ.நா. ஆய்வுக் கழகத்திலிருந்து ஐ.நா.வும் பன்னாட்டுப் புரிதலும் என்ற பட்டயமும் பெற்றவர். குஜராத் சர்தார் பட்டேல் பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டர் பட்டம் பெற்றவர். ... கோவை ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலி கிராமியக் கல்லூரியின் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியராகவும், கலைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியவர். ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியர் மற்றும் முதல்வராகவும், ராஜபாளையம் ஏ.கே.டி. தர்மராஜா பெண்கள் கல்லூரியின் முதல்வராகவும் பணிபுரிந்தவர். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் வரலாற்றுத்துறை மற்றும் நூலகங்களில் கிடைத்த அனுபவமே இவரின் ஆய்வுக்கும், எழுத்துக்கும் பெரும் ஊக்கத்தைத் தந்தது. இதுவரை 20க்கும் மேற்பட்ட வரலாற்று நூல்களை எழுதிய இவர், இன்றும் வரலாறு தொடர்பான கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வருகின்றார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் க.வெங்கடேசன் :

வரலாறு :

வர்த்தமானன் பதிப்பகம் :