நவதுர்க்கை

ஆசிரியர்: சி.எஸ்.முருகேசன்

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 192
Weight150 grams
₹85.00 ₹76.50    You Save ₹8
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கல்விக்குக் கலைமகளும், செல்வத்துக்குத் திருமகளும், வீரத்திற்கு மலைமகளுமாக இருக்கும் மூன்று சக்திகளும் இணைந்த ஆதிபராசக்தியின் திருவடிவம்தான் துர்க்காதேவி.காளிக்கும் துர்க்கைக்கும் உள்ள ஒரே வித்தியாசம் காளி அமர்ந்த நிலையில் காட்சி தருவாள். துர்க்கையோ நின்ற நிலையில் அருள் புரிகின்றாள். இந்த இருவரின் கலப்புருவமே சாமுண்டி. இந்த மூன்று வடிவங்களும் உக்கிர ரூபங்களாய் மக்களிடையே அறிமுகமாகி வழிபாடியற்றப் படுகிறாள்.
காளி தேவிக்காகத் திரட்டப்பட்ட தகவல்கள் காளித் திருத்தலங்களாய் காளி தரிசனமாய் மலர்ந்திட எஞ்சிய ஆதிபராசக்தியின் அருட் தகவல்கள் நவதுர்க்கையாய் இந்நூலில் அறிமுகமாகின்றது.சென்ற ஆண்டு வரை இப்படி ஒரு நூல் எழுத வேண்டும் என்ற எண்ணமே எனக்கில்லை. ஆனால் திடீரென்று எழுந்த ஓர் எண்ணமே அம்பிகைகளைப் பற்றி எழுதத் தூண்டியது.
இஃது ஓர் அருளுணர்வே ஆகும். இறைவியின் ஆணையை மீறுவதற்கு நாம் யார். துர்க்கையைப் பற்றி எழுத ஆரம்பித்தது முதலே மளமளவென்று தகவல்கள் குவிய ஆரம்பித்தன. எதை எழுதுவது, எதை விடுவது என்ற நிலையில் நூலின் சுவை கருதி சில செய்திகளைத் தவிர்க்கவும் வேண்டிய நிலை ஏற்படவே செய்திகளைச்சுருக்கமாகவே தர வேண்டியதாயிற்று.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ்.முருகேசன் :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :