மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
₹160.00 ₹144.00 (10% OFF)

நல்லவண்ணம் வாழலாம்

ஆசிரியர்: சுகி சிவம்

Category ஆன்மிகம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 112
Weight100 grams
₹50.00 ₹45.00    You Save ₹5
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



அமைதியும், ஆழ்ந்த சிந்தனையும், தெளிந்த ஞானமும், இளந்தென்றல் தழுவிச்செல்வது போன்ற இனிய பேச்சும், ஒழுக்க ஒட்பமும் ஒருங்கே நிறைந்தவர் திரு. சுகி சிவம், அவருடைய அறிவார்ந்த கருத்துக் கருவூலமே இவ்வரிய நூல்.
இலக்கியத்தின் இரு முக்கியப் பிரிவுகள் கவிதையும், உரைநடையும் ஆகும், கட்டுரை, உரைநடை இலக்கியம், உரை நடையில் கட்டுரைகள் மற்றுமின்றிச் சிறுகதைகள், புதினங்கள் ஆகிய படைப்பிலக்கியங்களும் அடங்குவன. படைப்பிலக்கி யங்களில் ஆசிரியர் பாத்திரப் படைப்புகளைப் பேசவிட்டுத் தங்களை மறைத்துக் கொள்ளமுடியும். கட்டுரையில் ஆசிரியர் தன் னை அவ்வாறு கட்டுப் படுத்திக் கொள்ள முடியாது. ஆசிரியரின் கொள்கைகள், கோட்பாடுகள் நேரிடையே வெளிப்படும். எனவே படைப்பிலக்கியத்தினும் ஒருவருடைய கட்டுரைகளிலேயே அவருடைய உண்மையான கருத்துகளை, நோக்கங்களை அறிய முடியும். இந்நூல் கட்டுரை வடிவில் உள்ளதால் ஆசிரியர் சுகி. சிவத்தின் எண்ணங்கள், மனித குலத்திடம் அவர் கொண்டுள்ள ஈடுபாடுகள், அம்மனிதகுலம் உயர்வடைய அவர் காட்டுகின்ற வழிகள் முதலியவற்றை நாம் புரிந்து கொள்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுகி சிவம் :

ஆன்மிகம் :

கற்பகம் புத்தகாலயம் :