நலம் 360
ஆசிரியர்:
கு.சிவராமன்
விலை ரூ.210
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+360?id=1650-4118-5980-6059
{1650-4118-5980-6059 [{ஆசிரியர் உரை சிறந்த சித்த மருத்துவரான இவர், சென்னை கீழ்ப்பாக்கம் தோட்டம் பிரதான சாலை யில் 'ஆரோக்கியா சித்த மருத்துவமனையை நடத்தி வருகிறார்.

உடலுக்கு நலம் பயக்கும் உணவுகள் (Functional Foods) குறித்து. கடந்த பத்து ஆண்டுகளாக ஆய்வுகள் செய்து வருகிறார். உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்து, சித்த மருத்துவம், மூலிகை, உணவு குறித்த ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.

} { பதிப்புரை எத்தனை கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள், இணையத்தில், சமூக வலைதளங்களில் நிரம்பி வழிந்த அரவணைப்புகளில் நானும் விகடனும் கொஞ்சம் ஆடித்தான் போய் விட்டோம். இழந்ததையும் தொலைத்ததையும் எடுத்துச் சொல்லி, தினம் நம் மீது இறுகும் இறுக்கமான வணிகப்பிடியை அடையாளம் காட்டி, நலவாழ்வை நோக்கி நகர வழிகாட்டிய வரிகள் தான் 'ஆறாம் திணை' கட்டுரையின் வாசக்கால்கள். அழுக்குப் புடைவை அணிந்த பொக்கை வாய்ப் பாட்டியைக் கண்டதும் பட்டணத்துப் பேரக் குழந்தை ஓடிச் சென்று கட்டி அணைப்பது போலதான், "ஆறாம் திணை'யை அதன் வாசகர்கள் உச்சிமோந்து அணைத்துக்கொண்டார்கள்.

} {புத்தகம் பற்றி ஆறாம் திணையை முடித்து இளைப்பாற, மேற்கு தொடர்ச்சி மலையின் குந்தா மலைக்கிராமத்தின் சாலையோரத்தில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது வந்த தொலைபேசி அழைப்பு, என் வாழ்வின் மறக்க முடியாத ஒரு தருணம்.

“எனக்கு 71 வயசு. 40 வருட விகடன் வாசகன். 'ஆறாம் திணை' முடிஞ்சிருச்சுனு படிச்சப்ப, மனசு பாரமாயிடுச்சுப்பா. நெஜமா சொல்றேன் தம்பி... கண்ணீர் வந்திருச்சு! ரெண்டு வருஷத்துல என் வீடே வேற மாதிரி ஆகிருக்கு. எல்லாரும் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிறாங்க. உளுந்தங்களி திரும்ப வந்திருக்கு. மருமக முடக்கறுத்தான் தோசை சுடுறா. வித்து ட ல ாம் னு சொன்ன பூமி ல 'ஏதாச்சும் செய்யலாமா ப்பா?'னு பையன் கேட்கிறான். இப்போ - 'ஆறாம் திணை'யைக் கண்டிப்பா நிறுத்தியே ஆகணுமாப்பா ?' மே லு ம் ஆதங்கத்துடனும் அந்த திருப்பூர்பெரியவர் பேசப் பேச, நான் அழுதேவிட்டேன்.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866