நலமுடன் வாழ யோகா YOGA

ஆசிரியர்: க. சாந்தகுமாரி

Category யோகாசனம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 88
Weight100 grams
₹60.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உலகில் தோன்றிய மனிதர் ஒவ்வொருவரும் நலமுடனும் வளமுடனும் வாழவே விரும்புகின்றனர். அவ்வாறு வாழ்வதற்கு இயற்கை அவர்கட்கு வழிகாட்டியாக விளங்குகிறது. இயற்கையோடு இயைந்து முரண்படாமல் வாழ்ந்தால் வாழ்க்கையும், இயல்பாக அமையும். அதற்க மாறாக அறிவியல் மோகத்தில் ஆழ்ந்து உணவு முறைகள், நடை உடை பாவனைகள், பகுக்க வழக்கங்கள் போன்றவற்றில் இயற்கையிலிருந்து நீங்கி வெகுதொலைவு சென்று விட்டோம். எனவே இயல்பான இயக்கம் இன்றி உடல் உறுப்புகள் விரைவாகக் கெட்டுப் பல விதமான நோய்களுக்கு இடங்கொடுக்கின்றன.
உடலும் உள்ளமும் நலமாக இருக்க வேண்டுமெனின் உடல் உறுப்புகளுக்கு இயல்பான இயக்கங்களை செயற்கையில் ஊட்ட வேண்டியுள்ளது. அதற்காக ஏற்பட்டவையே யோகப் பயிற்சிகள் விளையாட்டுகள் உடல் உறுப்புகளுக்கும், யோகப் பயிற்சி உள்ளுறுப்புகளுக்கும் பாதுகாப்பாக அமைகின்றன. மனத்தையும் உடலையும் சிறப்பாகப்பேண யோகா பயன்படுகிறது. அத்தகைய யோகாசனங்களைத் தேர்ந்தெடுத்து இயல்பாகவும் எளிமையாகவும் பயிற்சியில் மேற்கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள நூலே 'நலமுடன் வாழ யோகா' என்னும் இத்தொகுப்பு நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
க. சாந்தகுமாரி :

யோகாசனம் :

கௌரா பதிப்பக குழுமம் :