நமக்கு நாமே மருத்துவர்

ஆசிரியர்: மூ.ஆ.அப்பன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication பாப்புலர் பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 64
First EditionOct 2018
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$2.25       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

இயற்கை அன்னையின் ஆசியால் உலகம் பரந்து விரிந்து கிடக்கின்றது. இயற்கை அன்னையின் சீதனங்களான மலைகள், மரங்கள், செடி, கொடிகள், மலர்கள், காய்கறிகள், பழங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். இயற்கை அன்னை கொடுத்த இக்கொடையினால் அன்றைய ஆதிமனிதன் எந்த நோய் நொடியுமின்றி நீண்ட நாட்கள் நலமுடன் வாழ்ந்திருக்கிறான். குலசேகரன்பட்டினம் எனும் ஒரு குறும்பட்டினத்தில் தென்னங்கீற்று, பனைக்கீற்று, வேப்பங்கீற்று என கடற்கரை காற்றும் தாலாட்டும் ஓர் அழகிய சோலையிலே 'இயற்கை வாழ்வு மையம்' அமைத்து, செயற்கை மருத்துவம் வியக்கும் வண்ணம் இயற்கை உணவின் மகிமையையும் அறிவியல் உண்மையையும் உலகுக்கு உணர்த்தி வருகிறார் இயற்கை உணவு நிபுணர் பெரியவர் மூ.ஆ. அப்பன் ஐயா அவர்கள்.
"இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடந்தேடி எங்கெங்கோ அலைகின்றாய் ஞானத் தங்கமே" - இச் சித்தர் பாடல் ஆண்டவருக்கும் பொருந்தும்; ஆரோக்கியத்திற்கும் பொருந்தும். ஆம்; ஆண்டவரைத் தேடியும் அலைய வேண்டாம்; ஆரோக்கியத்தைத் தேடியும் அலைய வேண்டாம். - ஆதி சங்கரர் அருளிய அத்வைதப்படி, பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே. சூரியன் வானளாவிய உயரேயிருந்து, சூரியனது ஒளிக் கதிர்கள் பிரபஞ்சமெங்கும் பரவியிருப்பது போல், ஆண்டவரும் உயரேயிருக்க, ஆண்டவரது, அருள் பிரபஞ்சமெங்கும் பரவியுள்ளது. மனிதரைத் தவிர்த்துப் பிற உயிரினங்கள் எல்லாம் இயற்கையுணவை உண்டு, இயற்கையோடியைந்த வாழ்வு வாழ்வதால், அவற்றுக்கு மட்டும் ஆண்டவர் அருள் கிட்டுகிறது. மனிதரும் பசித்தபோதெல்லாம் தனக்குரிய இயற்கை யுணவாகிய, தேங்காய், பழவகைகளை நன்கு மென்று. புசித்து, இயற்கையோடியைந்த வாழ்வு, இயன்ற பொழுதெல்லாம் வாழ முயலும் போதுதான் நமக்கு ஆண்டவரது பரிபூரண அருள் முழுமையாகக் கிட்டும் என்பது ஆன்மீக அளவில் ஆழ்ந்த உண்மை! திருமூலரும், 'ஊனுடம்பு ஆலயம், உள்ளம் பெருங்கோயில்' என்று தான் நமக்கு வழி காட்டியுள்ளார். ஆனால், நாம் தான் ஆழ்ந்து அறியாது, 'திசைமாறிய பறவை போல்' ஆண்டவரையும், ஆரோக்கியத்தையும் தேடி, ஊர் ஊராக, நாடுநாடாக அலைந்து வருகிறோம்! - காற்றைக் கண்ணால் பார்க்கவியலாது. ஆனால் உணரலாம். அதுபோல், ஆண்டவரையும் கண்ணால் பார்க்கவியலாது; ஆனால் இயற்கையுணவிற்கு முடிந்த அளவு மாறத் தொடங்கியதும் ஆண்டவரது அருளை உணரலாம் என்பது இறையுண்மை !
இதேபோல், நமக்கு எத்தனை நோயிருப்பினும், எத்தகைய நோயிருப்பினும், எவ்வளவு நாட்பட்ட நோயிருப்பினும், எம்மருத்து வத்தையும் அணுக வேண்டாம். 'கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு, நெய்க்கு ஊர் ஊராக அலைய வேண்டாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :