நன்னூல் - எழுத்ததிகாரம் ( எளிய உரை )

ஆசிரியர்: டாக்டர் தமிழண்ணல்

Category கட்டுரைகள்
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaperback
Pages 220
Weight250 grams
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'இயல் கருத்துநிரல்' - ஒரு புதிய முயற்சி. உரைநடை நன்னூற் சுருக்கம் எனலாம். அதனை ஒரு கட்டுரையைப் படிப்பதுபோல் பலமுறை படித்துவிட்டு, நூலுக்குள் நுழைவது நல்லது. நூலுள் எவையெவை, எவ்வரிசையில், எவவெப்பயன் கருதிக் கூறப்பட்டுள்ளன எனும் ஒரு 'முழுமைப் பார்வை' கிடைக்கும். ஒரு பூங்காவிற்குள் சென்று, மணமலர்களைக் காண, வழிகாட்டி அழைத்துப் போவது போன்றது இது.
ஒவ்வொரு நூற்பாவுக்கும் தரப்பட்டுள்ள தலைப்பே, ஒரு தெளிவு தரும். நீங்கள் படிக்கப்போவது இன்னது என்பதை, உடனே உணர்வீர்கள் புதிய முறையில் எழுதிய, எளியவுரையும் படிப்பவர் மனத்தில் பசுமரத்தாணி போல் கருத்துக்களைப் பதிய வைக்கும். குறிப்பெடுத்துப் படிப்பது நல்ல முறை. மூல நூலை விட்டுவிட்டுப் படிப்பது கல்வியே ஆகாது. நூற்பாக்கள் பலமுறை படிக்கப்பட்டு, மனத்தில் பதிந்தால், அது மிகுபுலமை பெறப் பிற்காலமனைத்தும் பயன்படும். எழுதிப் படிப்பது இன்னும் நல்லது. மாணவர்கள் இயல் ஒவ்வொன்றைப் பற்றியும், கருத்தரங்கக் கட்டுரைகள் படித்து, விவாதிப்பது முழுமையான பயன்தரும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் தமிழண்ணல் :

கட்டுரைகள் :

மீனாட்சி புத்தக நிலையம் :