நன்னயம்

ஆசிரியர்: நேசமித்ரன்

Category கவிதைகள்
Publication ஸிரோ டிகிரி பப்ளிஷிங்
FormatPaper back
Pages 99
ISBN978-93-87707-73-3
Weight150 grams
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சமகாலத் தமிழ்க் கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி தத்துவார்த்தச் சிந்தனைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர். என் தலைமுறையில் தேவதச்சனும் எஸ். சண்முகமும், இந்தத் தலைமுறையில் ஒரே ஒருவர்தான் எனக்குக் காணக் கிடைக்கிறார். அவர் நேசமித்ரன். பொதுவாக தத்துவமும் கவிதையும் இணைவதில்லை.' விஞ்ஞானத்தைப் போலவே தத்துவமும் உணர்வுகளைப் புறந்தள்ளி தர்க்கத்தை முன்னெடுக்கிறது. கவிதையோ இதற்கு மாறாக, தர்க்கம் - அ-தர்க்கம் என்ற நிலைகளைத் தாண்டி பித்த நிலைக்குச் சென்று விடுகிறது. ஆக, ஒரே நேரத்தில் தர்க்கம் - பித்தம் என்ற இரண்டு எதிர்நிலைகளில் இருத்தல் கொள்வது சாத்தியம்தானா? சாத்தியம்தான் என்கிறது நேசமித்ரனின் கவிதைகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

ஸிரோ டிகிரி பப்ளிஷிங் :