நதிமூலம்
ஆசிரியர்:
விட்டல் ராவ்
விலை ரூ.225
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?id=1344-0128-9335-5684
{1344-0128-9335-5684 [{புத்தகம்பற்றி தேச விடுதலைக்கு முன்னும் பின்னுமிருக்கும் நாட்கள் அற்புதமானவை. அந்த நாட்களில் காந்தி அலை என்பது பெருவாரியாக வெவ்வேறு வேகத்திலும் கதியிலும் இருந்து வந்திருக்கிறது. இந்த வேகத்தில் சராசரியாக சமூகத்தின் எல்லா மட்டங்களிலிருந்தும் ஜனங்கள் கவரப் பட்டதை, பங்கேற்றதை, அறிய வருகிறோம். எத்தனையோ பேரின் சிறுதுளி பெருவெள்ளமாய் அந்தப் போராட்ட அலை அடித்து வீசிக் கொண்டிருந்தது. சரித்திரம் பலரை அறிமுகப்படுத்தத் தவறியிருக்கிறது. அப்படித் தவறிப் போனவர்களில் சிலரின் கதைதான் இது. தீவிரவாதியாகயிருந்த ஒருவன் காந்தி அலையில் அடித்துச் செல்லப்படுகையில் காந்தியத்திலுள்ள தோல்விகளும் கதையில் இடம் பெறுகின்றன. அதே சமயம் இன்னொருவன், காலத்தின் இந்தப் பலத்த வீச்சுக்கு முன்னால் வெறும் பார்வையாளனாக மட்டும் நின்றுவிட்டுப் போகிறான். ஹனுமியின் செயல்களுக்கு ஒரு சாட்சியாகக்கூட இருந்து சாதாரண அபிலாஷைகளோடு நடமாடி மறையும். கிட்டா இரண்டாவது அலை.எங்கள் குடும்பத்திலிருந்து ஒரு சுதந்திரப் போராட்ட வீரரைப் பற்றி அம்மா சொன்னாள். சரித்திரம் அவரை அறிமுகப்படுத்தத் தவறியதை, நான் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட, அதைக் கேட்டுக் கண் பார்வையிழந்த தியாகி ஒருவர் திரு. சிட்டியின் உதவியுடன் என்னிடம் வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டார். சில ஆண்டுகளுக்குப் பின் அந்தப் பெரியவரை நான் தேடினேன். அப்போது கிடைத்தது தான் இந்த நதிமூலம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866