நட்சத்திர பாத பலன்களும், அஷ்டவர்க்க விளக்கமும்

ஆசிரியர்: புலியூர் பாலு

Category ஜோதிடம்
FormatPaperback
Pages 48
Weight50 grams
₹9.00 ₹8.55    You Save ₹0
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஜோதிட நூல்கள் பல எழுதியிருக்கிறேன். எத்தனை எழுதினாலும் மாளாது. எழுதிக் கொண்டேயிருக்கலாம். முற்காலத்தில் இரண்டு மூன்று ஜோதிட நூல்களை கையில் வைத்துக் கொண்டு பிரமாதமாகப் பலன் சொன்னவர்களுமுண்டு.
அதிக நூல்களைப் படித்த பிறகும் சொல்ல முடியாதவர்களுமுண்டு. நான் சிறுவனாகயிருக்கும் போது ஜோதிட நூல்களாகப் பலவற்றை எழுதியவர்களையும் பார்த்து பேசியிருக்கிறேன். அவர்களெல்லாம் ஜோதிட நூல்களை எழுதுவதிலேயே பெருமை பெற்றிருந்தார்கள். ஜோதிடம் யாருக்கும் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சொல்லமாட்டார்கள்.
நூல்களை எழுதுவதிலுள்ள பெருமை, புகழ், கௌரவம் ஜோதிடம் சொல்வதிலில்லையென்று உணர்ந்தவர்கள் அவர்கள். ஆனால் ஜோதிட நூல்களை எழுதி வெளியிடுவதால் அவர்களுக்கு நஷ்டமே ஏற்பட்டது என்றாலும் அவர்களது ஜோதிட நூல்கள் மிகப் பிரமாதமான கணித வகைகளைக் கொண்டது. அதை உணர்ந்தவர்கள்தான் அதன் சிறப்பை உணர முடியும். ஜோதிடம் நன்றாகச் சொல்லி அதன் மூலம் பணம் பெற்றவர்கள் நூல்களை எழுத முன்வரவில்லை .
நானும் ஜோதிடம் தெரிய வந்த நாள் முதல் நூல்களை எழுத வேண்டுமென்றுதான் எண்ணினே தவிர, ஜோதிடம் சொல்லிப் பணம் பண்ண வேண்டுமென்கிற எண்ணமே எனக்கிருந்ததில்லை. எழுதுவதற்கும் ஆதாரம் வேண்டுமே. இவன் நூலில் நல்ல கருத்துகளிருக்குமென்று எண்ணி பலர் வாங்க வேண்டுமானால் என் திறமை எந்தளவு என்று மற்றவர்கள் தெரிந்து கொண்டால்தானே நூல்கள் விற்பனையாகும்! அதற்கு ஒரே வழி, வாரப் பத்திரிகையில் எழுத வேண்டும். ஜோதிட வாரப் பத்திரிகையென்றால் ராசிபலன் மட்டும் வெளியிட்டு வந்தால் பத்தாது. அதுதான் எல்லா தினசரி பத்திரிகைகளிலும் வருகிறதே!

உங்கள் கருத்துக்களை பகிர :
புலியூர் பாலு :

ஜோதிடம் :

பாரதி பதிப்பகம் :