நடுகல்

ஆசிரியர்: தீபச்செல்வன்

Category நாவல்கள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaperback
Pages 200
ISBN978-93-86555-57-1
Weight250 grams
₹220.00 ₹209.00    You Save ₹11
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



2010 - 2012 கிளிநொச்சியின் நிகழ்காலத்திலும், அதற்கு முந்தைய இருபத்தைந்து ஆண்டுகள் முன்னோக்கிய நினைவுகளின் பின்னணியில் இரண்டு சிறுவர்கள் பற்றிய கதையும் அவர்களை சூழவிருந்த மாந்தர்களின் கதையும்தான் நடுகல். குழந்தைகளின் கதை மாத்திரமல்ல, குழந்தைகள் மொழிந்ததுமே இந்நாவல். 2013இல் எழுதத் தொடங்கிய நாவலை வெளியிட ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஈழத்தில் வாழ்ந்தபடி இதுபோன்ற புனைவை எழுதுவது தற்கொலைக்குச் சமனானது. ஏற்கனவே, கண்ணில் எண்ணை விட்டு என் எழுத்துக்களையும் என்னையும் தேடியும் தடுத்தும் அச்சுறுத்தி வருகிறது இலங்கை இராணுவம். ஆனாலும் என் மண்ணின் மாந்தர்களின் கதைகளை எழுதியாக வேண்டிய பெரும் கடமை எனக்குண்டு. எந்த நகரத்தில் இக் கதை நிழ்வதாக எழுதப்பட்டதோ அந் நகரத்தில் இக் கதை வெளியிடவும் வாசிக்கப்படவும் வேண்டும். நம் குழந்தைகளின் கனவு மெய்ப்படட்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தீபச்செல்வன் :

நாவல்கள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :