நடந்தாய்; வாழி,காவேரி!

ஆசிரியர்: தி. ஜானகிராமன்

Category பயணக்கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Back
Pages 288
ISBN978-81-89945-25-1
Weight350 grams
₹350.00 ₹297.50    You Save ₹52
(15% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகாவேரி, காலந்தோறும் இலக்கியங்களில் இடம்பெற்று வந்ததன் உச்சமாக, தானே தலைவியாய்த் திகழும் இலக்கியம் இது. "காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம்” என உணர்ந்து தெளிந்த 'சிட்டி' (பெ.கோ. சுந்தரராஜன் )யும் தி. ஜானகிராமனும் இணைந்து எழுதிய இப் பயணக் கதை - காவேரிக் கரைக் காட்சிகளை, அவற்றின் "பகைப்புலங்களை, காவேரி சார்ந்த வரலாற்றை, பண்பாட்டை, புகைப்படங்கள்கோட்டோவியங்களுடன் தருகிறது. நாற்பதாண்டுகளுக்குப் பிறகு இந்தச் செவ்வியல் பயணக் கதை புதிய பதிப்பாக இப்போது வெளிவந்துள்ளது.

தமிழ்ப் பயணக்கட்டுரை நூல் களில் ஒரு கிளாசிக்காக கருதப்படுவது 'நடந்தாய் வாழி காவேரி'. 1971 ஆம் ஆண்டு Bookventure என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்நூல் 'வாசகர் வட்டம்' திரு. கிருஷ்ண மூர்த்தி மற்றும் லஷ்மி கிருஷ்ண மூர்த்தி ஆகியோரின் கனவுத்திட்டம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்நூலை வெளியிட 'காலச்சுவடு பதிப்பகத்திற்கு அனுமதி அளித்த கிருஷ்ண மூர்த்தி தம்பதியினருக்கு மனமார்ந்த நன்றி. உரிமை பெறுவதில் உறுதுணையாக இருந்த எழுத்தாளர் சா. கந்தசாமி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தி. ஜானகிராமன் :

பயணக்கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :