நஞ்சுண்ட காடு

ஆசிரியர்: குணா கவியழகன்

Category நாவல்கள்
Publication அகல்
FormatPaperback
Pages 148
First EditionMay 2014
2nd EditionMay 2016
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹135.00 ₹128.25    You Save ₹6
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவிட்டுக்காக நான் உழைத்தபோது எப்படி என்னை நான் பொருட் படுத்தவில்லையோ, அப்படியே நாட்டுக்காக என்று உழைக்கும்போது குடும்பத்தை நான் பொருட்படுத்த முடியாது என்பதை விளங்கி யுள்ளேன். ஆனாலும், நினைவுகள் சதா அலைக்கழிக்கின்றன. இப்போது உன்னால் ஆறுதல் அடைந்திருக்கிறேன். ஒரு போராளி மீதம் இருக்கும்வரை கைவிடப்படாதிருப்பது விடுதலை இலட்சியம் மட்டுமல்ல, எங்கள் குடும்பங்களும்தான் என்று உணருகின்றேன். இடப்பெயர்வில் சனங்களின் அவலம் என்னால் காணச் சகிக்க வில்லை. தென்மராட்சித் தெருக்களில் கண்கொண்டு பார்க்கமுடியா திருக்கிறது. குழந்தைகளும் கர்ப்பிணிகளும் வயோதிபர்களும் என்ன ஆவார்களென்று நினைக்க எங்கோ வலியெழுந்து தலைவிறைக்கிறது.

எதனையும் எதனோடும் ஒப்பிடமுடியாது. ஏனென்றால் அதுவது. அதற்குரிய சிறப்பியல்போடு இருக்கும். ஆனால் எம்மால் ஒப்பிடாமலும் அளவுகோல் இல்லாமலும் வாழமுடியாது. ஏணைப்பிறையில் பக்கம் 82இல் வருவதுபோல் "வாழ்க்கையில் அதுவொரு போலி ஆனால் வாழ்க்கைக்குத் தேவையான போலியாக அது இருக்கு" உலகில் உள்ள அனைத்து விடுதலைப் போராளிகளுக்கும், அவ்வாறு மாறமுடியாத போராளி உணர்வுள்ளவர்களுக்கும் நிச்சயமாக ஒரு பொதுத்தன்மை இருக்கும். அவர்கள் நிச்சயமாக மக்சிம் கோர்க்கியின் 'தாயை' வாசித்திருப்பார்கள். வாசித்தவர் மனதிலே பாவெல்லும் அவனது தாயும் என்றும் இடம்பிடித்திருப்பார்கள், ஏணைப்பிறையை வாசித்த பின் சுகுமாரும் பெயர் அறியப்படாத அவனது அக்காவும் இடம்பிடித்துக்கொள்வார்கள். தாயிலும் (தாயின் பெயர் சரிவரத் தெரியாது) பொறுப்பற்ற குடிகாரத் தந்தை, ஏணைப்பிறையிலும் அவ்வாறே. ஆனால் இங்கு தாய்க்குப் பதில் அக்கா. ஏணைப்பிறையில் ஒரு கட்டத்தில் அம்மா செயலற்றுப் போகின்றார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குணா கவியழகன் :

நாவல்கள் :

அகல் :